34580
page-template/template_concern_page.php
https://olivaclinic.com/tamil/tanned-skin
34580
page-template/template_concern_page.php

பழுப்பு நிறமேறிய சருமம் (Tanned Skin): காரணங்கள், தடுத்தல் மற்றும் சிகிச்சைகள்

Highlights

  • ● நமது சருமத்தின் நிறம் கருமை/பழுப்பு அடைதல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வுதான். அல்ட்ரா வயலட் (புற ஊதா) கதிர்கள் நமது உடலின் மீது தொடர்ந்து படும் போது இவ்வாறு நிகழும்.
  • ● அவ்வாறு படும்போது மெலனின் உற்பத்தி அதிகமாகிறது. அதனால் மெலனின் ஆக்ஸிடைஸ் ஆகும்போது அதாவது, மெலனோசைட்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சருமத்தின் நிறம் மேலும் அடர்த்தியாக கருமையாக மாறுகிறது.
  • ● நம்முடைய நெற்றி, நெற்றிப்பொட்டுப் பகுதி, கைகளில் வெளியே தெரியும் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள சருமம் பெரும்பாலும் இவ்வாறு கருமையாக மாறும்.
  • ● சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் லோஷன் மிகச் சிறந்தது.
  • ● இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். மேலும் ஒருவரது இனம், வயது, வெளிப்புறத்தில் சூரிய ஒளி படும்படியாக அவர்கள் செய்யும் வேலைகள் அவர்கள் அணியும் உடை மற்றும் அவர்களது சருமத்தின் வகை போன்ற பல காரணிகள் சருமத்தின் நிறம் கருப்பாவதையும் அதன் அளவையும் நிர்ணயிக்கும்.
  • ● 5 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவருக்கும் UV கதிர்கள் மேலே படும்போது இவ்வாறு ஏற்படலாம்.

கருமை அடைந்த சருமம் என்பது என்ன?

மிக அதிகமாக சூரிய ஒளி, குறிப்பாக UV கதிர்கள் ஒருவர் மீது அதிகமாகப் படும்போது சருமம் கருமை அடைவதைத்தான் இவ்வாறு கூறுகிறோம். சருமத்தில் மெலனின் அதிகமாகும் போது இவ்வாறு ஏற்படுகிறது. கூடுதலாக நமது சருமம் பாதிப்படையாமல் இருக்க நமது உடலில் இயற்கையாகவே உள்ள பாதுகாப்பு ஏற்பாடு என்று கூட இதைக் கூறலாம். மெலனினின் ஒரு வகையான யூமெலனின், நமது சருமத்தை அடர்ந்த பிரவுன் நிறமாக மாற்றுகிறது.

பொதுவாக சூரிய ஒளி நமது உடலில் நேரடியாகப் படக்கூடிய இடங்களான முகம், உள்ளங்கைகள், கைகள், கால்கள், பாதங்கள், முதுகு, கழுத்து போன்ற பகுதிகளில் உள்ள சருமப் பகுதி அதிகமாகக் கருமையடையும்.

சருமம் கருமையடைவதற்கான முக்கிய காரணங்கள்:

  • UV-A கதிர்கள் மேலே படுதல்: இந்த UV-A கதிர்கள் ஆபத்து விளைவிக்கக் கூடியவை. நமது சருமத்தினை ஆழமாக ஊடுருவிச் சென்று செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
    1. UV-A கதிர்கள், நமது காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தை ஊடுருவக் கூடியவை ஆதலால், இவை ஆண்டு முழுவதும் நம் மேல் பட வாய்ப்பு உண்டு.
    2. மெலனோசைட்களிலிருந்து சுரந்து கெரடினோசைட்களுக்கு செல்லும் மெலனின்தான் நமது சருமம் இவ்வாறு பிரவுன் நிறமாகவும் கருமையாகவும் மாறக் காரணமாகிறது.
    3. UV-A கதிர்கள் நமது உடலில் இயற்கையாக உள்ள கொலாஜன் சேமிப்பை நேரடியாகத் தாக்குவதால் வயதான தோற்றம் ஏற்படுகிறது.
    4. மேலும் நீண்ட நாட்கள் தொடர்ந்து நம்மேல் UV-A கதிர்கள் பட்டால் நமது DNA பாதிக்கப்படலாம்; சருமப் புற்றுநோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்.
  • UV-B கதிர்கள் நம்மேல் படுதல்: இந்தக் கதிர்கள் நமது சருமத்தின் மேல் பகுதியை (upper skin layers) பாதிக்கக்கூடியவை; எனவே இவை ஆபத்தானவை.
    1. UV-B கதிர்கள், கோடை காலத்தில் நம்மேல் அதிகமாகப்படும். குளிர் காலத்தில் சற்றுக் குறையும்.
    2. வானில் உள்ள ஓசோன் படலம் UV-B கதிர்களைப் பெருமளவு தடுத்துவிடும். இருந்தாலும் 5-10%, UV-B கதிர்கள் அத்தடையை மீறி ஊடுருவி வந்துவிடும்.
    3. UV-B கதிர்கள் நம்மேல் படும்போதும், DNA பாதிக்கப்படலாம். அதனால் மெலனின் அதிகம் சுரக்கலாம்.
    4. மிக அதிகமாக UV-B கதிர்கள் நம்மேல் பட்டால் சூரிய வெப்பத்தால் ஏற்படும் காயங்கள், மச்சங்கள், சருமம் வயதான தோற்றம் பெறுதல், சருமம் கறுத்துப் போகுதல், சில வகையான சருமப் புற்றுநோய்கள் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.
    5. UV-B கதிர்கள்தான் நமது சருமத்தில் வைட்டமின் D உற்பத்தியாகவும் காரணமாக உள்ளன.
  • செயற்கையாக நமது சருமத்தை கருமையடையச் செய்யும் சாதனங்கள்: Tanning lamps எனப்படும் விளக்குகளைப் பயன்படுத்தினால் சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படலாம்.

வகைகள் மற்றும் பிரிவுகள்:

உங்கள் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என்று துல்லியமாக அறிந்து கொண்டால், எந்த அளவு உங்கள் சருமம் கருமையாகும் என்று சரியாக அறிய முடியும்.

  • உங்கள் சருமம் பிரிவு- I (Type I) ஐச் சேர்ந்ததாக இருந்தால், உங்கள் சருமத்தின் நிறம் வெளிறிய வெண் நிறமாக இருக்கும். இது கருமை அடையாது.
  • உங்கள் சருமம் பிரிவு- II ஐச் சேர்ந்திருந்தால், உங்கள் நிறம் லேசான வெண் நிறம் முதல் மிக வெளிறிய பிங்க் (beige) நிறமாக இருக்கும். லேசாக இது கருமையடையலாம்.
  • உங்கள் சருமம் பிரிவு III ஐச் சேர்ந்ததாக இருந்தால் உங்கள் சருமம் வெளிறிய பிங்க் (beige) நிறமாக இருக்கும். இது மிக மெதுவாக லேசான பிரவுன் நிறமாக மாறலாம்.
  • உங்கள் சருமம் பிரிவு IV ஐச் சேர்ந்ததாக இருந்தால் அது லேசான பிரவுன் நிறமாக இருக்கும். பின்பு அடர்ந்த பிரவுன் நிறமாக மாறும்.
  • உங்கள் சருமம் பிரிவு V ஐச் சேர்ந்ததாக இருந்தால் உங்கள் சருமம் மிதமான பிரவுன் நிறமாக இருக்கும். அது கறுத்து பிரவுன் நிறமாக மாறலாம்.
  • உங்கள் சருமம் பிரிவு VI ஐச் சேர்ந்ததாக இருந்தால், உங்கள் நிறம் அடர்ந்த பிரவுன் அல்லது கருப்பாக இருக்கும். அது மேலும் கருமையடையலாம்.

கண்டறிதல்:

ஒரு தோல் மருத்துவரால் சருமம் எந்த அளவு கருமை அடைந்துள்ளது என்று மிகச் சரியாகவும் துல்லியமாகவும் அறிய முடியும். நேரில் அவரை சந்திக்கும் போது அவர் உங்களை மிகச் சரியாக பரிசோதித்து உங்கள் சருமம் கருமை அடைந்துள்ளதற்கான காரணங்களையும் எந்த அளவு கறுத்துள்ளது என்பதையும் அறிவார்.

உங்கள் சருமம் கருமை அடையும் ஆபத்து உள்ளதா?

யாருடைய சருமமும் கருமை அடையலாம்; இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோல் சற்று மெலிதாக இருப்பதால், அல்ட்ரா வயலட் கதிர்களால் அவை அதிகமாக பாதிக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோரையும் UV கதிர்கள் கூடுதலாக பாதிக்கும்.

தடுத்தல் மற்றும் இப்பிரச்சனையைக் கையாளுதல்:

நமது உடலின் சருமம் கருப்பாகாமல் இருக்க தோல் மருத்துவர்கள் கீழ்க்கண்ட குறிப்புகளைக் கூறுகின்றனர்:

  • ஆண்டு முழுவதுமே வெளியே செல்லும் முன்பு UV-A மற்றும் UV-B கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடிய சன் ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்தவும். பெரும்பாலான சரும வகைகளுக்கும் இந்த லோஷனில் SPF 30க்குக் குறையாமல் இருப்பது பொருத்தமாக இருக்கும். சில சரும வகைகளுக்கு 50 SPF தேவைப்படலாம். தோல் மருத்துவர் பரிந்துரைக்கும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
  • வெப்பம் மிக அதிகமாக இருக்கையில் குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.
  • வெளியில் செல்லும் போது பெரிய தொப்பி அல்லது ஸ்கார்ஃப் மற்றும் கருப்புக் கண்ணாடி (கண்களைப் பாதுகாக்க) அணியவும்.
  • சூரிய ஒளி தாக்காதபடி உடை அணியுங்கள். அடர் நிறமுள்ள, சற்று இறுக்கமாக நெய்யப்பட்ட/பின்னப்பட்ட ஆடைகள் சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்கும்.

சுய வைத்தியம்:

கருமையடைந்த சருமத்தை சரிசெய்ய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை பொதுவாகப் பிரபலமாக இருந்தாலும், முடிந்த அளவு இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை தற்காலிகமாக தீர்வுகளை அளித்தாலும் கூட, ஒரு மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகு தேவையானால் பின்பற்றுவது நல்லது.

தற்போதுள்ள சிகிச்சை முறைகள்

நீங்கள் உங்கள் கறுத்துப் போன சருமத்தை மிகவும் திறம்பட சரி செய்ய வேண்டும் என விரும்பினால், கட்டாயம் ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கிற்கு வரவும். அங்கு கீழ்க்கண்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

  • இரசாயன பீல்கள்
  • லேசர் டோனிங் சிகிச்சைகள்
  • தடவக் கூடிய மற்றும் உள்ளே எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்துகள்

ஒலிவா கிளினிக்கில் உள்ள நல்ல திறமை வாய்ந்த, பயிற்சியும் அனுபவமும் மிக்க தோல் மருத்துவர்கள் உங்களுக்கேற்ற தனிப்பட்ட சிகிச்சையை திட்டமிடுவார்கள். மேலும் சிகிச்சை முடிந்த பிறகு நீங்கள் நீண்ட நாள் நல்ல பலன்களைப் பெறுவதற்கான சிறந்த வழிகளையும் கூறுவார்கள். இன்றே ஒலிவா கிளினிக்கை அணுகுங்கள்.

நோயைப் பற்றிய கணிப்பு:

உங்கள் சருமத்திற்கு கருமையை நீக்கும் சிகிச்சையை அளிக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் எமது தோல் மருத்துவர் இணைந்து வழிகாட்டுவார். இன்றே ஒலிவா ஹேர் & ஸ்கின் கிளினிக்கை அழைத்து முன்பதிவு செய்துகொள்ளவும்; அனுபவம் மிக்க தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்; ஏனெனில் உங்கள் சருமத்தைப் பாதுகாத்தல் மிகவும் அவசியம்.

    Talk to Our Experts