- Home
- ஸ்கின் ளடட்டனிங் சிகிச்ளசகள்(Skin Tightening)
தளர்ந்து மற்றும் தொங்கிப்போன சருமத்தை இறுகச் செய்யும் லேசர் சிகிச்சை
சுருக்கங்கள் நீங்கிய, இறுக்கமான உறுதியான சருமத்தைப் பெற சிறந்த வழி - 100% நேர்த்தியானது அறுவை சிகிச்சை அற்றது
நமக்கு வயதாகும் போது நமது ஞானமும் விவேகமும் அதிகரிப்பது இயல்புதான். ஆனால் அவற்றுடனே நமது சருமமும் தளர்வாகி ஆங்காங்கே தொங்கிப் போக ஆரம்பித்துவிடுகிறது. நமக்கு வயதாகும் போது இளமையான, உறுதியான, இறுக்கமான, சீரான சருமம் காணாமல் போய்விடுகிறது. நமது சருமத்திலும் முகத்திலும் எவ்வித மாற்றமும் தோன்றாமல் ஞானமும் விவேகமும் மட்டும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆம்! இப்போது ஒலிவாவில் வழங்கப்படும் அதி நவீன ஸ்கின் டைட்டனிங் சிகிச்சையான இன்ட்ராஜென் சிகிச்சை மூலம் இது சாத்தியமே.
ஒலிவா, தங்களுக்கு மேலும் ஒரு உன்னதமான சேவையை அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது. இன்ட்ராஜென் எனும் இந்த அதிநவீன மேம்பட்ட சிகிச்சை முறை ரேடியோஃப்ரீக்வென்ஸி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழங்கப்படுகிறது. உங்கள் முகத்தில் உள்ள சருமம் தொங்கிப் போகுதல், பொதுவாகவே சருமம் தளர்ந்து போதல், தாமாகவே தாழ்ந்துவிடும் கண் இமைகள், மூக்கு, கழுத்து இவற்றைச் சுற்றி ஏற்படும் மடிப்புகள் போன்றவற்றைப் பற்றி இனி நீங்கள் கவலைப்படவே வேண்டாம். இன்ட்ராஜென் எனப்படும் இந்த USFDA ஒப்புதல் பெற்ற, மோனோபோலார், RF தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சை மிகுந்த பாதுகாப்பானது. இதன் மூலம் சருமம் இழந்த இளமையையும் உறுதியையும் மீண்டும் பெற முடியும். முகமும் நன்கு சீரான வடிவம் பெறும்.
சருமம் தளர்ந்து, தொங்கிப் போவதற்கான அறிகுறிகள்
பொதுவாக வயதாகும்போது சருமம் தளர்ந்து போகுதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படலாம். இது வயதாவதன் காரணமாகவும், உடல் எடை கூடுதல் அல்லது குறைவதன் காரணமாகவும், புவியீர்ப்பின் மூலமும் ஏற்படலாம். நமது சருமம் தொங்கிப் போவதும் தளர்வதும் முதலில் நமது முகத்திலும், கழுத்திலும் தெரிய ஆரம்பிக்கும் கண்ணாடியில் உங்களது உருவத்தைப் பார்த்துக் கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று பார்க்கவும் –
- நெற்றியில் கோடுகள்
- தாழும் இமைகள்
- கண்களுக்குக் கீழ் சருமம் தளர்ந்து போகுதல்
- வெளிப்படையாகத் தெரியும் சிறு துளைகள் – இவற்றால் சருமம் கரடுமுரடாக மாறுதல்
- மூக்கைச் சுற்றி மடிப்புகள் மற்றும் சருமம் தளர்வுறுதல்
- முகவாய்ப் பகுதிக்குக் கீழ் சருமம் தொங்கிப் போகுதல்
- முகமே சற்று தொங்கிப் போகுதல்
- கழுத்தில் சருமம் தளர்ந்து போகுதல்
இவற்றுள் ஏதேனும் அறிகுறி வெளிப்படையாகத் தென்பட்டதா? ஆம் என்றால், ஒலிவா கிளினிக்கில் உள்ள தோல் மருத்துவ வல்லுநரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற இதுவே சரியான நேரம்.
ஸ்கின் டைட்டனிங் சிகிச்சைக்கு RF
மோனோபோலார் RF சக்தி என்பது மிகப் புதுமையான, திறம்படச் செயல்படும் தொழில்நுட்பமாகும். அறுவை சிகிச்சையின்றி சருமத்தை இறுகச் செய்ய மிகவும் பொருத்தமானது. சருமத்தை இறுகச் செய்து அதன் நெகிழ்வுத்தன்மையைச் சரிசெய்ய இன்ட்ராஜென் எனும் இந்த மேம்பட்ட RF சாதனம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சாதனம் முதலில் சருமத்தின் அடிப்பகுதியை சூடாக்குகிறது. அதனால் கொலாஜன் சுரப்பு தூண்டப்படுகிறது (production and remodeling). இந்த செயல்முறை/சிகிச்சையின் காரணமாக எந்தவிதமான பெரிய அறிகுறிகளும் இன்றி உடனடியாக சருமம் இறுக்கமாகிறது. முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தொங்கும் சருமத்தை இறுக்கமாக்க இந்த RF ஸ்கின் டைட்டனிங் மிகச் சிறந்த சிகிச்சையாகும். இந்த சிகிச்சை முகத்தில் உள்ள தேவையற்ற, தளர்வான, தொங்கும் சருமத்தை இறுக்கி ஒரு இளமையான கச்சிதமான தோற்றத்தை அளிக்கிறது. முகவெட்டும் கச்சிதமாகத் தோற்றமளிக்கிறது.
முகத்தில் உள்ள சருமத்தை இறுகச் செய்ய வழங்கப்படும் இன்ட்ராஜென் சிகிச்சை
நமது வயதை நமது முகம்தான் பெரிய அளவில் காட்டிக் கொடுக்கிறது. நமது வயதை நாம் ரகசியமாக வைத்திருக்க வேண்டுமானால் அதற்கு நாம் இன்ட்ராஜென் போன்ற மிகச் சிறந்த டைட்டனிங் சிகிச்சைகள் மூலம் நமது சருமத்தைத் தான் மிகக் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.
நமது முகத்தில் உள்ள தளர்ந்துபோன, தொங்கிப்போன சருமம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் மிகவும் பாதுகாப்பான முறையில், திறம்பட அணுகவும், சிகிச்சைகள் வழங்கவும், ஒலிவாவில் உள்ள நமது தோல் மருத்துவ நிபுணர்கள், US FDA ஒப்புதல் பெற்ற இந்தத் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகின்றனர். ஒலிவா கிளினிக்கில் வழங்கப்படும் இந்த இன்ட்ராஜென் ஸ்கின் டைட்டனிங் சிகிச்சைகள் முகத்தில் வாய்ப்பகுதி, கண்களைச் சுற்றியுள்ள பகுதி, முகவாய்ப்பகுதி போன்ற இடங்களில் உள்ள தளர்வுற்ற, தொங்கிப்போன சருமத்தை மிகக் கச்சிதமாக இறுகச் செய்து, சிறந்த தோற்றத்தை அளிக்கின்றன. இன்ட்ராஜென் RF சாதனத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்படும் போது உடனடியாக சருமத்தில் கொலாஜன் சுரப்பது அதிகரிப்பதாலும், இரத்த ஓட்டம் மேம்படுவதாலும், உடனே சருமம் இறுகக் தொடங்குகிறது. பலன்களும் மிக விரைவாகத் தெரிய ஆரம்பிக்கின்றன.
கழுத்துப் பகுதிக்கான இன்ட்ராஜென் சிகிச்சை
பொதுவாக நமக்கு வயதாகும்போது முதலில் அறிகுறிகள் வெளிப்படும் பகுதிகளில் கழுத்துப் பகுதியும் ஒன்று. கழுத்தை சுற்றி சருமம் தளர்ந்து காட்சியளிப்பது, வயதான தோற்றத்தை மிக அதிகமாகவே வெளிப்படுத்தும். நமது கழுத்து நம் உடலில் மிகவும் நுணுக்கமான பகுதியாகும். எனவேதான் அங்கு முகத்தை விட வேகமாக சருமம் தளர்வுற ஆரம்பிக்கிறது. ஆனால் அதே சமயம் நம் கழுத்தை பல சமயங்களில் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.
கழுத்தை சுற்றி இவ்வாறு தளர்ந்து தொங்கிப் போய் உள்ள சருமத்தை சீர்செய்ய இன்ட்ராஜென் சிகிச்சை மிகுந்த பலனளிக்கும் சிகிச்சையாகும். இதில் பயன்படுத்தப்படும் RF சக்தி, கழுத்துப்பகுதியில் உள்ள சருமத்தை உள்ளிருந்து இறுக்கமாக்குகிறது. எனவே இந்த சிகிச்சைக்கு உடனே பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்.
ஸ்கின் டைட்டனிங் சிகிச்சைகளினால் கிடைக்கும் பலன்கள்
உங்கள் சருமத்திற்கு மீண்டும் இளமையான தோற்றத்தைத் தருவதுதான் இந்த ஸ்கின் டைட்டனிங் சிகிச்சைகளின் மிகப்பெரிய பலனாகும். மேலும் சருமம் நன்கு இறுக்கப்பட்டு சீராக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் பிற பலன்கள் –
- முகத்திலும் கழுத்திலும் உள்ள சுருக்கங்களையும் மடிப்புகளையும் நீக்கி சமன் செய்து வயதான தோற்றத்தை வெகு விரைவாக மாற்றுகிறது
- தளர்ந்துபோன, தொங்கிப்போன சருமத்தைத் திறம்பட சரியாக்குகிறது
- சுருக்கங்கள், மெல்லிய கோடுகள், மடிப்புகள் போன்ற அனைத்தையும் மிகத் திறமையாக நீக்குகிறது
- சருமத்தில் உள்ள பள்ளங்கள் போன்றவற்றையும் ஓரளவு நீக்குகிறது
- சருமத்தின் மிருதுத்தன்மையை மேம்படுத்தி, வழவழப்பாக மாற்றுகிறது
- உங்களுடைய வெளிப்புறத் தோற்றத்தையே மிகவும் மேம்படுத்தி, உங்களது தன்னம்பிக்கையை அதிகமாக்குகிறது
இன்ட்ராஜென் சிகிச்சையின் சிறப்பு ஆதாயங்கள்
இன்ட்ராஜென் சிகிச்சையின் மூலம் நமது சருமம் நன்கு இறுக்கப்பட்டு, அதன் மிருதுத்தன்மை மேம்படுத்தப்பட்டு தோற்றமும் மிகச் சிறப்பாக மாற்றப்படுகிறது. சருமத்தில் உள்ள கோடுகளும் சுருக்கங்களும் நீக்கப்படுகின்றன. கீழ்க்கண்ட காரணங்களால், இந்த ஸ்கின் டைட்டனிங் சிகிச்சை மேம்பட்ட சிகிச்சையாகக் கருதப்படுகிறது –
- US FDA ஒப்புதல் பெற்ற பாதுகாப்பான வழிமுறைகள். மிகவும் நேர்த்தியான செயல்முறைகள்
- கழுத்திலும் முகத்திலும் உள்ள தொங்கிப்போன, தளர்வான சருமத்தை மிகத் திறமையாக சரிசெய்கிறது
- சருமத்தை இறுக்கமாக்கி, இளமையான வழவழப்பான சருமத்தைத் தருகிறது
- அனைத்து விதமான சரும வகைகளுக்கும், அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடியது
- இயற்கையானது. வலியற்ற சிகிச்சைமுறை
- பலன்களுக்குக் காத்திருக்கத் தேவையில்லை. சிகிச்சைக்குப் பின் உடனடியாக இயல்பு வேலைகளுக்குத் திரும்பலாம்
- உடனடியாக, வெளிப்படையாகப் பலன்கள் தெரியும்
- சிகிச்சை முடிந்த பிறகு எவ்விதமான செயற்கைத் தோற்றமும் இருக்காது
- எவ்வித ஆபத்தும், பக்கவிளைவுகளும் இல்லை
- அறுவை சிகிச்சை அற்றது. எனவே மயக்க மருந்து தேவையில்லை. அந்த இடத்தில் மரத்துப் போவதற்காக கிரீம்களைத் தடவ வேண்டிய அவசியமும் இல்லை
எமது ஸ்கின் டைட்டனிங் RF தொழில்நுட்பத்தில் வழங்கப்படும் சிகிச்சைகளை முயற்சித்துப் பாருங்கள். மீண்டும் உங்கள் இளமையான, இறுக்கமான, சீரான சருமத்தைப் பெறுங்கள். உங்கள் நகரில் உள்ள எமது ஒலிவா கிளினிக்கிற்கு இன்றே வந்து பாருங்கள்.
ஒலிவா கிளினிக்கில் ஸ்கின் டைட்டனிங் சிகிச்சை
சருமம் சார்ந்த பிற சிகிச்சைகளைப் போலவே இந்த இன்ட்ராஜென் RF ஸ்கின் டைட்டனிங் சிகிச்சைக்கு முன்பும் ஒருமுறை நமது தோல் மருத்துவ நிபுணர்களிடம் விரிவான ஆலோசனை பெற வேண்டும். இதற்குப் பிறகு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தனிப்பட்ட அறை ஒதுக்கப்பட்டு அதில் சிகிச்சை வழங்கப்படும். மொத்த சிகிச்சைக்கும் 1 மணி நேரத்திற்கு மேல் ஆகாது. இன்ட்ராஜென் RF கருவியின், கைப்பிடி போன்ற பகுதி, எங்கெல்லாம் சருமம் தளர்வுற்று தொங்கி போயிருக்கிறதோ அப்பகுதியின் மேல் செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது வலியே இருக்காது. மயக்க மருந்தோ, மரத்துப் போவதற்கான கிரீமோ தேவையில்லை.
உடனடியாகவே சருமம் இறுகுவதையும் காண முடியும். 2-4 மாதங்களில் மெதுவாக அது மேலும் இறுகுவதையும் உணரமுடியும். பொதுவாக ஒருவருக்கு ஆண்டிற்கு 4 முறை சிகிச்சை தேவைப்படும் (சராசரியாக). பிறகு பராமரிப்பிற்காக ஆண்டிற்கு 1 அல்லது 2 முறை வரவேண்டியிருக்கும்.
உடனடியாக ஒலிவாவின் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற அபாயிண்ட்மென்ட் பெறுங்கள். மீண்டும் இளமையான சருமத்தைப் பெறுங்கள்.
ஒலிவாவை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
உங்கள் சருமத்திற்கான அனைத்து சிகிச்சைகளுக்கும் ஒலிவா கிளினிக் மிகச் சிறந்த தேர்வாகும். பிற கிளினிக்குகளிலிருந்து நாங்கள் தனிப்பட்டு நிற்பதற்கான காரணங்கள்:
- கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளும், விதிமுறைகளும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கட்டாயமாக பின்பற்றப்படும்
- எமது கிளினிக்கில் உள்ள தோல் மருத்துவ நிபுணர்கள் இவைபோன்ற சருமம் சார்ந்த சிகிச்சைகள் அளிப்பதில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள்
- இன்ட்ராஜென் RF கருவி US FDA ஒப்புதல் பெற்றது. இது பாதுகாப்பானது. அறுவை சிகிச்சை இன்றியும், உடலுக்குள் ஊடுருவாமலும் சிகிச்சை வழங்கப்படுகிறது
- உங்கள் ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எனவே ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கும் ஏற்ப தனித்தன்மையுடன் கூடிய சிகிச்சைத் திட்டம் தயாரிக்கப்படுகிறது
- மிகவும் தனித்துவமானது, கௌரவமானது, வாடிக்கையாளர்களின் விவரங்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆலோசனை வழங்கப்படும். தனித்தனி அறையில் சேவை வழங்கப்படும்
- ஒவ்வொரு ஒலிவா கிளினிக்கிலும் அதி நவீன வசதிகளும் நல்ல அமைதியான, இதமான சூழலும் இருக்கும்.
Skin Tightening Procedure Explained By Dermatologist
Oliva offers advanced treatments for skin tightening. Check out the details on our procedures and gain deeper insights into how the treatment proceeds, under an expert dermatologist.
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 6,00,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy
ஆம். இது மிகவும் பாதுகாப்பானது. ஒலிவாவில் உள்ள புகழ்பெற்ற தோல் மருத்துவர்கள் US FDA ஒப்புதல் பெற்ற கருவிகளையே பயன்படுத்துவதால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் மிகக் கடுமையான, பரிசோதிக்கப்பட்ட, வழிகாட்டு நெறிமுறைகள் ஒலிவாவில் பின்பற்றப்படுவதால் இச் சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது, திறம்படப் பலன் அளிக்கக்கூடியது.
அறுவை சிகிச்சை அல்லாத, முகத்திலும் கழுத்திலும் உள்ள சருமத்தை இறுக்குவதற்கான சிகிச்சைக்கு 40-60 நிமிடங்கள் ஆகலாம்.
மிக மேம்பட்ட, முன்னோடியாக விளங்கும் இன்ட்ராஜென் சிகிச்சையை வழங்கும் ஒலிவா கிளினிக்குகளில், அதிநவீன ரேடியோஃப்ரீக்வென்ஸி கருவிகள் பயன்படுத்தப்பட்டு, மிக நுட்பமான இடங்களான முகம், கழுத்து, கண்களுக்குக் கீழே உள்ள பகுதி, முகவாய்ப்பகுதி போன்றவைகளிலும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
நிச்சயமாகத் தேவையில்லை. இன்ட்ராஜென் RF சிகிச்சை அளிக்கும் போது சருமத்தின் கீழே லேசாக சூடாக்கப்படுகிறது. உண்மையில் உங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதே தெரியாது. உங்கள் மதிய உணவுக்கான ஓய்வு நேரத்தின் போது கூட நீங்கள் வந்து இச் சிகிச்சையைப் பெறலாம். தளர்ந்துபோன உங்கள் சருமத்தை சீராக்கி இளமையான தோற்றம் பெறலாம்.
இந்த சிகிச்சை பெறும்போது ஒரு நல்ல இதமான சூட்டில் உள்ள கல்லால் ஒத்தடம் பெறுவது போல் இருக்கும். எனவே சருமம் லேசாக சூடாகும்.
கண்களைச் சுற்றிலும் உள்ள, இமைகளுக்கு அருகிலும் உள்ள நுட்பமான சருமப் பகுதிகளிலும் இச் சிகிச்சையை மிகப் பாதுகாப்பாக வழங்க முடியும்.
இல்லை. சிகிச்சைக்குப் பிறகு சிறப்புப் பராமரிப்புகள் ஏதும் தேவையில்லை. ஆயினும் சூரிய ஒளி படாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது.
இல்லை. வெளிப்படையாகப் பார்க்கும்போது மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பதாகப் பிறருக்குத் தெரியாது. மாற்றத்தை உணருவார்களே தவிர, இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டதை அறியமாட்டார்கள்.
நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் பல சமயங்களில் இன்ட்ராஜென் ஸ்கின் டைட்டனிங் சிகிச்சை வேறு சில சிகிச்சைகளுடன் இணைத்தே வழங்கப்படுகிறது.