34534
page-template/template_concern_page.php
https://olivaclinic.com/tamil/moles
34534
page-template/template_concern_page.php

மச்சங்கள் தோன்றுவதற்கான காரணங்களையும் மச்சங்களை நீக்கும் வழிகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

Highlights

  • ● மச்சங்களை மருத்துவத்தில் ‘நெவி’ என்று குறிப்பிடுவார்கள். இவை நமது உடலில் எந்தப் பகுதியிலும், சிறு சிறு புள்ளிகளாகத் தோன்றலாம்.
  • ● நம்மில் பலருக்கு சராசரியாக 50 வயதுக்குள் 10-40 மச்சங்கள் தோன்றும்.
  • ● சில சமயங்களில் சில மச்சங்கள் புற்றுநோயாக மாற வாய்ப்புகள் உண்டு; அப்போது அவற்றை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.
  • ● மச்சங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று பாருங்கள் – அரிப்பு, திடீரென்று அளவில் பெரியதாகுதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரிடம் சென்று, புற்றுநோய் வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லையா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

சருமத்தில் தோன்றும் மச்சம் என்பது என்ன?

மச்சங்களை மருத்துவரீதியாக மெலனோசைடிக் நெவஸ் என்று குறிப்பிடுவார்கள். இவை பொதுவாக ஒரே இடத்தில் அடைசலாக உள்ள பிக்மெண்ட் செல்களின் காரணமாக தோலின் மேல் ஏற்படும் வளர்ச்சியாகும். மச்சங்கள் தட்டையாக இருக்கும் அல்லது முட்டை வடிவத்திலோ வட்ட வடிவத்திலோ இருக்கும். மச்சம் பொதுவாக ஒரு பிரவுன் நிறப் புள்ளியாக இருக்கும். சில சமயங்களில் கருப்பு, சுட்ட நிறம் (tan), சிவப்பு, நீலம், பிங்க் மற்றும் தோலின் இயற்கையான நிறம் போன்றவற்றிலும் இருக்கலாம். சிலருக்கு அந்த மச்சங்களின் மேல் முடி வளர்ந்திருக்கும்.

மச்சங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். முகம், கழுத்து, தலை, அக்குள் பகுதிகள், பிறப்புறுப்புகள் மற்றும் கை கால் நகங்களில் கூட மச்சங்கள் தோன்றலாம். தனித்தனியாகவோ கூட்டமாகவோ தோன்றலாம். பிறவிலேயே தோன்றும் மச்சங்கள் பொதுவாக பெரியதாக இருக்கும்.

மச்சங்களின் பிரிவுகளும் வகைகளும்:

மச்சங்களை அவற்றின் தோற்றம், தோன்றும் காலம், அவை பெருகும் விதம் இவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு பிரிப்பார்கள் –

  • பிறவியிலேயே தோன்றும் மச்சங்கள் – இவற்றை மருத்துவத்தில் “கான்ஜெனிடல் நெவி” என்பார்கள். இவை பிறவியிலேயே தோன்றிவிடும். பொதுவாக 100 பேரில் ஒருவருக்குத் தோன்றும். இத்தகைய மச்சங்கள் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் அவற்றின் அளவைப் பொருத்து அமையும்.
  • பிறந்த பிறகு, பிற காரணங்களால் பெறும் மச்சங்கள் – மிகச் சிறிய வயதிலேயோ அல்லது வயதான பின்போ ஏற்படும் மச்சங்கள் இந்தப் பிரிவின்கீழ் வரும். தொடர்ந்து வெயில் அவற்றின் மேல் பட்டால் அப்போது அவை மேலும் வெளிப்படையாக பளிச்சென்று தெரியும். இவை புற்றுநோயாக மாறும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
  • ஒழுங்கற்ற, சீரற்ற மச்சங்கள் – இதை மருத்துவத்தில் “டைபிளாஸ்டிக் நெவி” என்பார்கள். இவை பெரியதாகவும் ஒழுங்கற்ற வடிவத்திலும் இருக்கும். மையப்பகுதி பிரவுன் நிறமாக இருக்கும். இவை பொதுவாக பரம்பரைக் காரணங்களால் வரும். இவை புற்றுநோயாக மாறும் வாய்ப்பு அதிகம்.
  • புற்றுநோயாக மாறக்கூடிய மச்சங்கள் அல்லது மெலனோமா – இவை முற்றிலும் சீரற்று ஒழுங்கற்று இருக்கும் மச்சங்கள். இவை பெரும்பாலான சமயங்களில் சருமப் புற்றுநோயாகவோ அல்லது மெலனோமாவாகவோ மாற வாய்ப்பு அதிகம்.

மச்சங்கள் ஏன் ஏற்படுகின்றன?

மச்சங்கள் பெரும்பாலும் கீழ்க்கண்ட காரணங்களால் உருவாகின்றன:

  1. மரபணு சார்ந்த காரணங்கள் – நமது பெற்றோர்களிடமிருந்து நாம் பெறும் மரபணுக்கள்தான் நமது உடலில் மச்சங்களின் தோற்றம், அவற்றின் அமைப்பு மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. ஒருவரது இனமும் அவருக்கு மரபணு சார்ந்து மச்சங்கள் தோன்றுவதை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. உதாரணமாக சிவப்பு நிறமுடைய மக்களுக்குப் பிறரைவிட அதிக மச்சங்கள் தோன்ற வாய்ப்பு அதிகம். மேலும் 2015ம் ஆண்டில் நடந்த ஒரு ஆய்வின்படி மரபணு மாற்றங்கள் காரணமாக (genetic mutations) மச்சங்கள் தோன்றுகின்றன என்று தெரியவந்துள்ளது. BRAF மரபணுவின் மாற்றங்கள், பரம்பரை காரணமாக வந்த மச்சங்களில் (புற்றுநோய் அல்லாதவை) 78% இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. சூரிய ஒளி மேலே படுதல் – நமது மேல் சூரிய ஒளி அதிகமாகப் படும் போது மச்சங்கள் தோன்றுவதும் அதிகரிக்கின்றன. குறிப்பாக குழந்தைப் பருவத்திலும் “டீன்” வயதுகளின் தொடக்கத்திலும் மச்சங்கள் இது காரணமாக உள்ளது. மேலும் தொடர்ந்து சூரிய ஒளி நம்மீது படும்போது மச்சங்கள் அடர்ந்த நிறமாகவும் மாறுகின்றன.
  3. ஹார்மோன் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் – பருவமடையும் போதோ, கர்ப்ப காலத்திலோ நமது உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாகவும் மச்சங்கள் தோன்றலாம். மேலும் இத்தகைய ஏற்ற இறக்கங்களால் உடலில் உள்ள மச்சங்கள் அடர் நிறமாகவும் அளவில் பெரியதாகவும் மாறலாம்.

மச்சங்கள் திடீரென்று ஏன் தோன்றுகின்றன?

பொதுவாக மச்சங்கள் நமது சருமத்தின் நிறத்தை விட அடர் நிறத்தில் இருக்கும். இவை தொடர்ந்து நீண்ட காலம் சூரிய ஒளி நம்மீது படும்போது நன்கு வெளிப்படையாகத் தெரியும். நமது சருமத்தில் உள்ள மெலனோசைட்ஸ் எனப்படும் செல்கள், தோல் முழுவதும் பரவியில்லாமல் சில இடங்களில் அடர்த்தியாக இருக்கும் போது மச்சங்கள் அங்கே தோன்றும். இந்த மெலனோசைட்கள் தான் “மெலனின்”னை சுரக்க வைக்கின்றன. மெலனின்தான் நமது சருமத்திற்கு அதன் இயற்கையான நிறத்தைத் தருகிறது.

பொதுவாக மச்சங்கள் மெலனோமாவாக மாறுவதில்லை. மிகச் சில வகையான “டிஸ்பிளாஸ்டிக் நெவி” மச்சங்கள் மட்டும் மெலனோமாவாக மாறலாம். ஒரு மச்சத்தின் நிறம், வடிவம், அளவு மற்றும் மிருதுத்தன்மை ஆகியவற்றில் மாறுதல் ஏற்பட்டால் இவ்வாறு மெலனோமா ஏற்பட வாய்ப்பு அதிகம். சில சமயங்களில் நமது சருமத்தில், ஒரு புதிய நிறத்திட்டாகவும் மெலனோமாக்கள் தோன்றலாம். எப்போதும் நாம் நமது உடலில் புதிய மச்சங்கள் தோன்றுகின்றனவா என்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

மச்சங்கள் திடீரென்று ஏன் தோன்றுகின்றன?

சீரற்ற அல்லது இயல்புக்கு மாறான மச்சங்கள் நமது உடலில் எந்தப் பகுதியிலும் தோன்றலாம்; அவை மெலனோமாவாக மாறும் ஆபத்து உள்ளது. எனவே தோல் மருத்துவர் முதலில் சருமத்தை நன்கு பரிசோதிப்பார். பிறகு குடும்பத்தில் யாருக்காவது இவ்வாறு திடீரென்று ஒழுங்கற்ற முறையில் மச்சங்கள் தோன்றியுள்ளதா என்று கேட்டு அறிந்துகொள்வார். இவை போன்ற பல விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு சரியான, பொருத்தமான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். சில சமயங்களில் தேவைப்பட்டால் “மெலனோமா”வாக மாறும் வாய்ப்பு பற்றி அறிய “பயாப்ஸி” செய்யப் பரிந்துரைக்கலாம்.

உங்களுக்கு மெலனோமா வர வாய்ப்பு உண்டா?

நீங்கள் வெப்ப மண்டலப் பகுதியில் வசிப்பவராக இருந்து, மேலும் உங்கள் சருமத்தில் அடிக்கடி UV கதிர்கள் அதிகமாகப் படும் வாய்ப்புகள் இருந்தால், மச்சங்கள் மூலம் மெலனோமா ஏற்பட வாய்ப்பு அதிகம். மிகவும் வெளிறிய நிறம் உடையவர்கள் மற்றும் பெண்களுக்கு இவ்வாறு திடீரென்று காரணமின்றி மச்சங்கள் தோன்றலாம். பெண்களுக்கு காலில் முட்டிக்குக் கீழே உள்ள பகுதி அல்லது ஆடு சதைப் பகுதியில் திடீரென்று மச்சங்கள் தோன்றினாலோ அல்லது இருக்கும் மச்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் காண்பித்தல் அவசியம். குடும்பத்தில் முன்னோர்களுக்கு மெலனோமா இருந்திருந்தாலோ, உடல் முழுவதிலும் 50க்கு மேற்பட்ட மச்சங்கள் இருந்தாலோ, சருமப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிக்கிறது.

மெலனோமாவைக் கண்டறிய சில குறிப்புகள்:

ஒரு மச்சம் மெலனோமாவாக மாறக் கூடிய ஆபத்து உள்ளதா என்று அறிய நாம் கவனிக்க வேண்டிய சில மாற்றங்கள்:

  1. நமது மச்சங்களின் நிறம், வடிவம், மிருதுத்தன்மை (Texture) அல்லது உயரம் போன்றவற்றில் மாறுபாடுகள்
  2. சீரற்று வளரும் மச்சங்கள்
  3. திடீரென்று மச்சம் கனமாக மாறுதல்
  4. மச்சங்கள் காய்ந்து போகுதல், பொருக்கு தட்டுதல்
  5. மச்சங்களில் திடீரென்று அரிப்பு ஏற்படுதல்
  6. மச்சங்களிலிருந்து இரத்தம் கசிதல் / இரத்தம் லேசாக வடிதல்

மச்சங்கள் ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கையாளுதல்:

நமது மரபணுக்களை நம்மால் மாற்ற முடியாது. எனவே அனைத்து வகையான மச்சங்கள் தோன்றுவதையும் தடுக்க முடியாது. கீழ்வரும் முறைகளைப் பின்பற்றினால் நமது மச்சங்களை நம்மால் இன்னும் சிறப்பாகக் கையாள முடியும் –

  1. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு – நேரடியாக சூரிய ஒளி நம்மேல் விழுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் அதிகமாக உள்ள நேரத்தில் நேரடியாக நம்மேல் சூரிய ஒளி படுவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறை வெளியே போகும்போதும் கட்டாயம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும். சூரிய ஒளி நம்மேல் படாமல் இருக்கும்படியான முழுக்கால் பேண்ட்கள், முழுக்கை சட்டைகளை அணியவும். அகலமான தொப்பி, கண்ணுக்கு கருப்புக் கண்ணாடி போன்றவற்றை அணிந்து UV கதிர்களினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.
  2. மாற்றங்களைக் கவனிக்கவும் – உங்கள் உடலில் உள்ள மச்சங்களின் நிறத்திலோ அல்லது அளவிலோ ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை உடனடியாகக் கவனிக்கவும். இவை மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக உங்கள் குடும்பத்தில் முன்னோருக்கு இருந்தால், உங்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம், சரியான கால இடைவெளிகளில் மருத்துவரிடம் சென்று சரியான பரிசோதனைகள் செய்து கொள்ளவும்.
  3. சருமத்தை பாதிக்கக்கூடிய tanning விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் – Tanning lamps எனப்படும் விளக்குகளிலிருந்து UV கதிர்கள் வெளியேறுகின்றன. அவை சருமப் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

Home Remedies For Moles:

மச்சங்களுக்கான வீட்டு வைத்தியங்கள்:

இத்தகைய கை வைத்தியங்களால் பெரும்பாலும் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை; ஆனாலும் மெலனோமாவின் அறிகுறிகள் தென்பட்டால், அவைகளை இத்தகைய சிகிச்சைகளால் குணப்படுத்த முடியாது. சரியான சிகிச்சை பெற மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிக மிக அவசியம்.

தற்போதுள்ள சிகிச்சைகள்

மச்சங்களை நீக்குவதற்கு நாம் வழங்கும் சில சிகிச்சைகள் இவை:

  • லேசர் சிகிச்சை
  • அந்த இடத்தில் தடவக் கூடிய மருந்துகள்
  • அவற்றை நீக்குதல்

நோயைப் பற்றிய கணிப்பு:

சருமப் புற்றுநோய் அல்லது மெலனோமா சாதாரண மச்சம் போல் தோற்றமளிக்கலாம். ஆனால் கட்டாயம் அதை கவனிக்க வேண்டும். மச்சங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், மெலனோமாவா என்று கண்டறிய உடனடியாக தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். பெரிய மச்சங்களை விட சிறிய மச்சங்களை நீக்குவது எளிது; அவற்றை நீக்குவதால் பெரிய வடுக்களும் ஏற்படுவதில்லை.

    Talk to Our Experts