34515
page-template/template_concern_page.php
https://olivaclinic.com/tamil/dermatosis-papulosa-nigra-dpns
34515
page-template/template_concern_page.php

டெர்மடோஸிஸ் பாபுலோஸாநிகரா (DPNs): காரணங்கள், சிகிச்சைகள்

Highlights

  • பொதுவாக நமது சருமத்தில் தோன்றும், ஆபத்து விளைவிக்காத சிறு புள்ளிகளையே DPNs என்று கூறுகிறோம். ஆனால் இவற்றை நீக்கப் பல வழிகள் உள்ளன. அழகியல் சார்ந்த காரணங்களுக்காக பலர் இவற்றை நீக்க விரும்புகின்றனர். லேசர் சிகிச்சை மற்றும் எலக்ட்ரோகாடெரி சிகிச்சை போன்ற மேம்பட்ட சிகிச்சை முறைகள் தற்போது உள்ளன. இவை DPNகளை திறம்படவும் பாதுகாப்பாகவும் நீக்கும்.

சருமத்தில் உள்ள DPNகள் என்றால் என்ன?

DPNs எனப்படும் இவை நமது சருமத்தில் தோன்றும் மிகச் சிறிய கருப்பு அல்லது பிரவுன் புள்ளிகளைக் குறிக்கிறது. இவை பொதுவாக கண்ணைச் சுற்றியுள்ள இடத்திலும் தாடைப் பகுதியிலும் தோன்றும். இவை நமது உடலின் பிற பாகங்களிலும் தோன்றலாம். கழுத்து, மார்பு, முதுகு போன்று எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். “செபோரெயிக் கெரடோஸிஸ் (SK)” என்று குறிப்பிடப்படும் ஒரு சருமப் பிரச்சனையின் வேறு ஒரு வடிவமாகத்தான் மருத்துவர்களால் இது பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு சிகிச்சை அளிக்காமலே விட்டு விட்டாலும், பெரிய பாதிப்புகள் வராது.

  • தோன்றுதல் – இவை வழவழப்பாக, வட்டமாக, தட்டையாக இருக்கலாம். அல்லது சருமத்தில் லேசாக ஒட்டிக் கொண்டு தொங்குவது போல இருக்கலாம். ஒட்ட வைத்தது போன்ற தோற்றத்தில் பாலுண்ணிகள் (அ) மருக்களைப் போன்று இருக்கும். இவற்றின் அளவு பொதுவாக 1 லிருந்து 5 மிமீ வரை இருக்கும்.
  • இது யாருக்கு வரலாம் – பொதுவாக இவை அடர்ந்த நிறமுடையவர்களுக்கு வரலாம். ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசியாக் கண்டத்தினரின் வம்சாவளியினருக்கு வரலாம். பெரும்பாலும் இவை பருவமடையும்போது தோன்றுகின்றன; ஆனால் சில சமயங்களில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாகத் தோன்றுகிறது.
  • பொதுவான சில அறிகுறிகள் – இவற்றுக்குப் பெரும்பாலும் அறிகுறிகள் இருப்பதில்லை; அவை சார்ந்து, பொருக்குத் தட்டுதல், தோல் உரிதல், புண்ணாகுதல் போன்றவையும் ஏற்படுவதில்லை. ஆனால் நமது உடல் உறுப்புகள் உராயக் கூடிய இடங்களில் இந்த DPNகள் இருந்தால், அப்போது எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்படுகின்றன. பல சமயங்களில் இந்த DPNகளை “மச்சங்கள்” என்று தவறாக எண்ணிக் கொள்கிறோம்.

DPNகள் பொதுவாக புற்றுநோய் சார்ந்தவை அல்ல. உடனடியாக இவற்றுக்கு நாம் மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஆனாலும் இவை தோன்றுவதற்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். இவை தோன்றுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்று அறிந்து கொள்ளுங்கள்.

DPNகள் எதனால் உருவாகின்றன?

டெர்மடோஸிஸ் பாபுலோஸாநிகாரா எனப்படும் DPNகள் தோன்றுவதற்கான காரணங்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறப்படவில்லை; இருந்தாலும் கீழ்க்கண்ட கூற்றுகள்/காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

  • பரம்பரைக் காரணங்கள் – பல ஆய்வுகளின் படி, குடும்பத்தில் முன்னோர்களுக்கு இவை தோன்றியிருந்தால், உங்களுக்கும் தோன்ற வாய்ப்புகள் உள்ளன என்று தெரியவந்துள்ளது. பிறழ்ந்த/மாறுபட்ட மரபணுக்களின் பொதுவான தன்மையால் முன்னோர்களுக்கு இருந்தால் உங்களுக்கும் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. DPNகளில் FGFR3 எனும் ஒரு மாறுபட்ட மரபணு இருப்பதே இந்த முடிவுக்கு காரணமாகும்.
  • அல்ட்ரா வயலட் கதிர்கள் நம் மேலே படுதல் – நமது உடலில் தலை, கழுத்து, உடலின் மேல்பகுதி போன்ற, அல்ட்ரா வயலட் கதிர்கள் படக்கூடிய இடங்களில் இத்தகைய கரும்புள்ளிகள் பெரும்பாலும் தோன்றுகின்றன.
  • வயது – நமக்கு வயதாகும்போது DPNகளின் அளவும் எண்ணிக்கையும் அதிகமாகின்றன.

சருமத்தின் தன்மையை அறிதல்

தோல் மருத்துவரால், நம்மை நேரடியாகப் பரிசோதிப்பதன் மூலம், DPNகளைப் பற்றி சரியாக அறிய முடியும். அவை எங்கெங்கே தோன்றுகின்றன, எப்படிப் பரவியுள்ளன என்பதைப் பற்றி அவர்களால் நன்கு புரிந்து கொள்ள முடியும். சில சமயங்களில் தேவைப்பட்டால் டெர்மாஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளச் சொல்லலாம். இதற்கு உடலை ஊடுருவிய சிகிச்சை தேவையில்லை. இதன்மூலம் DPN மற்றும் பிற அடர்நிற வீக்கங்கள் / புள்ளிகளிலிருந்து வேறுபடுத்தி அறிய முடியும். பொதுவாக வேறு எந்தவிதமான பரிசோதனைகளும் இதற்குத் தேவையில்லை.

மிக மிக அரிதான சமயங்களில் மட்டுமே தோல் மருத்துவ நிபுணர் பயாப்ஸி செய்யச் சொல்லலாம். வீங்கிய பகுதியிலிருந்தே எடுக்கப்பட்ட தோலின் ஒரு சிறு பகுதியை நுண்நோக்கியின் மூலம் (Microscopic view) பரிசோதித்து அதில் புற்றுநோய்க்கான செல்கள் உள்ளதா என்று கண்டறிவார்கள்.

உங்களுக்கு இவை ஏற்படக்கூடிய ஆபத்து உண்டா?

பொதுவாக DPNகளால் ஏற்படும் புள்ளிகள், வீக்கங்கள் போன்றவை எவ்விதமானத் துன்பமும் தருவதில்லை. ஆனாலும் இவை அளவிலேயோ எண்ணிக்கையிலோ மிகப்பெரிய அளவில் அதிகரித்தால், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த DPNகள் அதிகம் தோன்றக்கூடிய ஆபத்து உள்ளவர்களுள் சிலர்:

  • ஆப்பிரிக்கா, அமெரிக்கா வம்சாவளியினர், ஆசிய வம்சாவளியினர் மற்றும் கருப்பு நிறமுடையவர்கள்.
  • குடும்பத்தில் முன்னோர்களுக்கு இவை இருந்தால், உங்களுக்கும் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

DPNகளை எப்படித் தடுக்க வேண்டும்?

மரபுவழிக் காரணங்களால் DPNகள் தோன்றினால் அவற்றைத் தடுக்க முடியாது. பொதுவாக கீழ்க்கண்ட நடவடிக்கைகள் பலனளிக்கலாம்.

  • நேரடியாக அல்ட்ரா வயலட் கதிர்கள் உடலின் மேல் படுவதைத் தவிர்த்தல்.
  • குறைந்தபட்சம் SPF30 உள்ள சன்ஸ்க்ரீன் லோஷனை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தச் சொல்லி உங்கள் தோல் மருத்துவர் ஆலோசனை வழங்கலாம். எப்போதும் பகலில் வெளியே செல்வதற்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு முன்னால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது. உங்கள் சரும வகைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பரிந்துரைக்குமாறு உங்கள் மருத்துவரிடம் கேட்டுப் பெறவும். அப்போதுதான் சூரிய ஒளியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

தாமாகவே செய்து கொள்ளும் சிகிச்சைகள் பலன் தருமா?

இந்தப் பிரச்சனைக்கு வீட்டிலேயே தாமாக செய்யக்கூடிய சிகிச்சைகளை முயற்சிக்காமல் இருப்பது நல்லது; அவற்றால் பல சமயங்களில் சருமத்தில் எரிச்சல் வீக்கம் போன்றவை தோன்றலாம். சரியாக காரணங்களைக் கண்டறியாமல், தாமாகவே செய்துகொள்ளும் சிகிச்சைகள் சில சமயங்களில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

DPNக்கான சிகிச்சைகள் என்னென்ன?

ஒலிவா கிளினிக்கில் உள்ள அனுபவமும் பயிற்சியும் பெற்ற மருத்துவர்கள் DPNகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சைகளை அளிப்பார்கள். மிகவும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ-அழகியல் சார்ந்த சிகிச்சைகளை வழங்கி அவர்களால் DPNகளை மிகத் திறம்பட நீக்கமுடியும். அத்தகைய சிகிச்சைகளுள் சில:

  • எலக்ட்ரோகாடெரி அல்லது ரேடியோ ஃப்ரீக்வென்ஸி
  • Nd:YAG லேசர்கள் (Neodymium-doped Yttrium Aluminium Garnet) பயன்படுத்தி, நிண்ட அதிர்வுகள் (Long-pulsed) மூலம் செய்யப்படும் சிகிச்சை.

உங்கள் சருமத்தின் வகைக்கேற்பவும், உங்கள் பிரச்சனையின் தீவிரத்திற்கேற்பவும் சரியான சிகிச்சை முறைகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

நோயைப் பற்றிய கணிப்பு

DPN எனும் இந்த சருமப் பிரச்சனைக்குப் பெரிய அறிகுறிகள் இருப்பதில்லை. பெரிய ஆபத்துகளும் வருவதில்லை. உங்களது பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கும் இதனால் ஏதும் பாதிப்புகள் வருவதில்லை. இருந்தாலும் DPNகள் இருந்தால், அழகியல் சார்ந்த காரணங்களுக்காக மட்டுமே கூட இத்தகைய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கி்ல் உள்ள அனுபவம் மிக்க தோல் மருத்துவர்களிடம் முன்பதிவு செய்துகொண்டு அவர்களை சந்தியுங்கள். அவர்களிடம் உங்கள் DPNகள் பற்றி மிகச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். DPNகளுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் திறம்படவும் சிகிச்சை அளிப்பது பற்றி அறிந்துகொள்ள இன்றே ஒலிவாவிற்கு வாருங்கள்.

    Talk to Our Experts