சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்?
இப்போது உலகளவில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த (ஸ்கின் வைட்டனிங்) மிகப் பல விதமான சிகிச்சைகள் உள்ளன. எனவே நமது சருமத்தின் இழந்த பொலிவையும் ஜொலிப்பையும் மீட்டு, மீண்டும் சருமத்தின் பழைய தன்மையைப் பெறுவதும் ஓரளவு சுலபமாகிவிட்டது. லேசர் சிகிச்சை முதல் ப்ளீச்சிங் வரை இதற்குப் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. உங்கள் சருமத்தின் கருமையை நீக்கி சிவப்பாக்க உள்ள ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை முறைகள் பற்றியும், அதற்கு ஆகக்கூடிய செலவு, அதன் வகைகள் இன்னும் பலப்பல விவரங்களை அறிய இதை நன்கு படிக்கவும்.
சருமத்தை சிவப்பாக மாற்றக் கூடிய சிகிச்சை முதலில் உங்கள் சருமத்தில் கூடுதலாய் சுரக்கும் மெலனின் அளவைக் குறைக்கிறது. இந்த மெலனின் சேர்ந்து ஆங்காங்கே இருப்பதனால்தான் கரும்புள்ளிகள், சருமத்தின் சீரற்றதன்மை ஆகியவை ஏற்படுகின்றன. இதைக் குறைக்கும் போது சருமத்தின் கருமை நீங்கி, வெளிர் நிறமடைகிறது. இத்தகைய ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகளே மங்கு (melasma), சூரியனால் ஏற்பட்ட பாதிப்பு, கரும் புள்ளி (freckles) மேலும் சில வகைத் தழும்புகளுக்கும் சரியான சிகிச்சையாய் அமைகிறது.
மிகச் சிறந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை முறைகள்
இவ்வாறு சருமத்தின் நிறத்தை மேம்படுத்த பலவிதமான சிகிச்சைகள் உள்ளன. உங்கள் தேவைக்கேற்ப உங்கள் உடலின் ஒரு பகுதியிலோ அல்லது முகத்திலோ இந்த சிகிச்சையைப் பெறலாம். மிகப் பரவலாக உள்ள சில ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை முறைகள் இவை:
-
- சருமத்தை சிவப்பாக ஆக்க கெமிக்கல் பீல் முறை – இந்த முறையின்படி இயற்கை முறையில் பெறப்பட்ட ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் கொண்ட ஒரு கரைசல், அந்த இடத்தில் தடவப்படுகிறது. அதனால் அந்தப் பகுதியில் சருமத்தின் மேலே உள்ள படலம் (layer) மட்டும் நீக்கப்படுகிறது. அங்கேதான் மிக அதிகமாக மெலனின் சேர்ந்திருக்கும். இதை நீக்கிய பிறகு கீழே உள்ள ஆரோக்கியமான சருமம் வெளிப்படும். அடர்த்தியின் அடிப்படையில் இந்த இரசாயனக் கரைசல் 3 விதமாக இருக்கலாம். 1. லேசானது 2. மிதமானது 3. ஆழமானது. நிறம் மாறியுள்ள சருமத்தை திறம்பட மேம்படுத்த இந்த கெமிக்கல் பீல் ஒரு சிறந்த, மென்மையான வழி. முகத்தில் உள்ள திட்டுக்கள், சூரிய ஒளிபட்டு கருமையான பகுதி, கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி, சருமத்தின் தன்மையையும் சீராக்கக் கூடியது. பெரும்பாலும் இந்த சிகிச்சை முகத்தின் சருமத்தை மேம்படுத்தவே பயன்படுகிறது.
- சருமத்தை சிவப்பாக்க லேசர் சிகிச்சை – இந்த லேசர் சிகிச்சை முறையில், அந்த இடத்தில் உள்ள சருமத்தின் மேல் ஒரு அடர்த்தியான ஒளிக்கற்றை செலுத்தப்படுகிறது. மிகுந்த சக்திவாய்ந்த இந்த ஒளிக் கற்றையால் அங்கேயுள்ள கூடுதல் மெலனின் தகர்க்கப்படுகிறது. பிறகு இயற்கையாக உள்ள சருமத்தின் எதிர்ப்பு சக்தியால் வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக நல்ல ஆரோக்கியமான ஜொலிக்கும் சருமம் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றும் சருமம் எவ்விதமான மாசு இல்லாமல் இருக்கும். இந்த சிகிச்சையை லேசர் பீல் அல்லது லேசப்ரேஷன் (lasabration) என்றும் கூறுவார்கள். சருமத்தில் உள்ள திட்டுக்கள், கரும் புள்ளிகள், சூரிய ஒளியால் நிறம் மங்குதல் ஒளியற்ற சருமம் போன்றவற்றுக்கு இது மிகச் சிறந்த சிகிச்சையாகும். இந்த லேசர் சிகிச்சை முகம் மற்றும் உடலின் வேறு சில பாகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இப்போது இந்த வீடியோவை பாருங்கள்!
- சருமத்தின் நிறத்தை மேம்படுத்த ஸ்கின் லைட்டனிங் ஊசிகள் – இந்த ஊசிகளில் குளுதாதியோன் என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தில் சுரக்கும் டைரோசினேஸ் எனும் ஒரு விதமான நிணநீரைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நீர்தான் நமது உடலில் மெலனின் உற்பத்திக்கு உதவி செய்கிறது. பரவலாக இருக்கும் நம்பிக்கையின்படி இந்த ஊசிகள் நமது சருமத்தில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, நமது சருமத்தை, அபாயகரமான UV கதிர்களிலிருந்து பாதுகாத்து சருமத்தை சிவப்பாக்குகின்றன. Natural Medicine Comprehensve Database எனும் அமைப்பு இதை பாதுகாப்பானதாக இருக்கலாம் (Possibly safe) பிரிவில் வைத்துள்ளது. ஆனால் அந்த அமைப்பு, சருமத்தினை சிவப்பாக்கும் பணியில் குளுதாதியோனின் பங்களிப்பைப் பற்றி எவ்வித அபிப்ராயத்தையும் வெளியிடவில்லை. சில ஆராய்ச்சிகளின்படி மிக அதிக அளவில் குளுதாதியோன் செலுத்தப்பட்டால் அது தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. எனவே குளுதாதியோன் பலன்கள்/விளைவுகள் பற்றி அறிய நல்ல ஆதாரங்களுடன் கூடிய ஆராய்ச்சிகள் தேவை. மேலும் இத்தகைய ஊசிகள் சில குறிப்பிட்ட சரும கிளினிக்குகளில் மட்டுமே கிடைக்கும். ஆயினும் இந்த முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
- சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் தயாரிப்புகள் – மார்கெட்டில் இதற்கான பல இரசாயனப் பொருட்கள் கிடைப்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் பலவற்றுள் அஸெலிக் அமிலம், அர்புடின், ரெடினால், ஹைட்ரோக்வினான், க்ளைகாலிக் அமிலம், லேக்டிக் அமிலம், கோஜிக் அமிலம் போன்றவை இருக்கும். இவற்றுள் சில வெளிறிடச் செய்யக்கூடியவை, அதாவது பிளீச்சிங் செய்யக்கூடியவை. இவை உடனடியாகப் பலன் அளித்தாலும் நீண்டகாலத்திற்குப் பலன் அளிக்காது. சில சமயம் இதில் உள்ள இரசாயனப் பொருட்களால் பக்க விளைவுகளும் ஏற்படலாம். மேலும் இவற்றைத் தொடர்ந்து நீண்ட காலமும் பயன்படுத்த முடியாது.
- அர்புடின் – சருமத்தின் நிறத்தை மேம்படுத்தக்கூடிய பல தயாரிப்புகள் மற்றும் சருமத்தில் உள்ள திட்டுகளை நீக்குவதற்கான தயாரிப்புகளில் அர்புடின் மிகவும் பிரபலமானது. இது முகச் சுருக்கங்கள், விரிவடைவதால் வரும் வடுக்கள், வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் போன்ற பலவற்றை நீக்குவதற்கு மிகவும் பயன்படுகிறது.
- சருமத்தின் நிறத்தை மேம்படுத்த அறுவை சிகிச்சை – சருமங்களில் உள்ள திட்டுக்களை நீக்குவதற்கு தற்போது பலர் மருத்துவ ரீதியாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் ஸ்கின் லைட்டனிங் அறுவை சிகிச்சைகள் இன்று செய்யப்படுவதில்லை. இதற்குப் பெரும்பாலும் லேசர் சிகிச்சை, இரசாயனப் பொருட்கள் மூலம் கெமிக்கல் பீல் போன்றவையே செய்யப்படுகின்றன. இவை பாதுகாப்பானவை, மிகுந்த பயன் தரக்கூடியவை, அறுவை சிகிச்சை இவற்றுக்குத் தேவையில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் அனுபவமுள்ள தகுதிபெற்ற தோல் மருத்துவர்களால் மட்டுமே இந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் ஸ்கின் வைட்டனிங் சிகிச்சைகளுக்கு இந்தியாவில் கட்டணங்கள்
பொதுவாக இந்த சிகிச்சையில் கெமிக்கல் பீல் சிகிச்சைக்கு ரூ.1,800 முதல் ரூ.5,000 வரையிலும், லேசர் சிகிச்சைக்கு ரூ4,000 – ரூ.30,000 வரையிலும் அதற்கான ஊசிகளுக்கு ரூ.6,000 முதல் ரூ.40,000 வரையிலும் செலவாகலாம். அதேபோல சிவப்பழகு கிரீம்கள் ரூ.200 முதல் ரூ.2,000 வரை கிடைக்கின்றன.
இந்த சிகிச்சைக்கான கட்டணங்கள் ஏன் மாறுகின்றன?
ஒவ்வொருவரது சருமத்தின் தன்மைக்கும் ஏற்ப, இந்த சிகிச்சைகள் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்படுவதால், இவற்றுக்கான கட்டணங்களும் வேறுபடுகின்றன.
எந்த இடத்தில் இந்த சிகிச்சையை அளிக்க வேண்டும், எந்த அளவு பரப்பிற்கு இது வழங்கப்பட வேண்டும் என்பவையும் கட்டணத்தைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக முகம் போன்ற சிறிய இடமானால் கட்டணம் குறையும்.
மேலும் கிளினிக் அமைந்துள்ள இடம், தோல் மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை வழங்குபவர்களின் ஆழ்ந்த அனுபவம், பயன்படுத்தப்படும் சாதனங்கள் இவற்றைப் பொருத்து கட்டணங்கள் பெருமளவில் வேறுபடும்.
இந்த சிகிச்சைக்கு முன்னும், பின்னும் – விளைவுகள்
முகத்தில் இந்த சிகிச்சை செய்வதற்கு முன்னும், பின்னும் எடுத்தப் படங்களைப் பார்க்கலாம்.
இத்தகைய ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை பற்றிய கட்டுக் கதைகளும் உண்மைகளும்
நம்மில் மிகப் பலர் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை சருமத்தை சிவப்பாக்குதல் (ஸ்கின் வைட்டனிங்) என்று நினைக்கின்றனர். பல தோல் மருத்துவ நிபுணர்களின் அபிப்பிராயத்தில் ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை என்பது ஒரு கட்டுக்கதையாகவே கருதப்படுகிறது. மிகக் கடுமையான இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி மெலனின் என்ற பொருளின் அடர்த்தியை மாற்றுதல் மிகவும் பாதுகாப்பற்றது எனவும், சமூக அழுத்தங்களினால் தான் இத்தகைய தேவைகள் ஏற்படுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர். உங்கள் இயற்கையான நிறத்தை மாற்றுவது என்பது இயலாத செயல் என்றே தோல் மருத்துவர்கள் வலுவாகக் கூறுகின்றனர்.
இந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை நிரந்தரமான தீர்வைத் தருமா?
ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையின் பலன்கள் ஒரு சில மாதங்கள் முதல் ஒரு சில வருடங்கள் வரை இருக்கலாம்.
இந்த சிகிச்சையின் பலன்களை நீண்ட நாட்கள் தக்க வைக்க தோல் மருத்துவர்கள் கீழ்க்கண்ட குறிப்புகளை வழங்குகின்றனர்:
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல்
- வெளியே போகும்போது சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்க நல்ல சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்
- சருமத்தைப் பாதுகாக்க தவறாமல் சில வழக்கங்களை மேற்கொள்ளுதல்
- தோல் மருத்துவர்கள் தெரிவித்தபடி, சரியான கால இடைவெளிகளில் பராமரிப்பு சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல்
- சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் நிறைய தண்ணீர் அருந்துதல்
- ப்ளீச்சிங் ஏஜென்ட்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் நிறைந்த பீல்கள் பயன்படுத்துவதனால் நிரந்தரப் பலன்கள் கிடைப்பதில்லை. இருந்தாலும் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைக்கு லேசர் சிகிச்சை நீண்டகாலத் தீர்வை அளிக்கிறது. லேசர் சிகிச்சைகள், டாட்டூக்கள் மற்றும் பிறவி வடுக்கள் போன்றவற்றை நீக்குவதில் மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆனால் சருமத்தில் உள்ள கருமை மற்றும் மெலஸ்மா போன்றவற்றை நீக்குவதற்கு அந்த அளவு திறம்பட செயல்படுவதில்லை.
இந்தியாவில் பெறக்கூடிய ஸ்கின் வைட்டனிங் சேவைகள்
நீங்கள் உங்கள் சருமத்தின் தன்மையை ஒரே சீராக மீண்டும் பெற விரும்பினால், இங்கு பல புகழ்பெற்ற சருமக் கிளினிக்குகள், பாதுகாப்பான முறையில் திறம்பட்ட சிகிச்சைத் திட்டங்களை அளிக்கின்றன. உங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறும், பொருந்துமாறும் இந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள் வடிவமைக்கப்படுகின்றன. நீங்கள் உடலின் எந்தப் பகுதியில் இந்த சிகிச்சையைப் பெற விரும்புகிறீர்களோ அதற்கேற்ப கீழ்க்கண்டவற்றில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்:
- முழு உடலுக்குமான லைட்டனிங் சிகிச்சை
- முகத்தை பளிச்சிடச் செய்யும் பிரைட்டனிங் சிகிச்சை
- அக்குள் பகுதிக்கான லைட்டனிங் சிகிச்சை
- கழுத்து, கைகள் மற்றும் கால்களுக்கான, பளிச்சிடச் செய்யும் பிரைட்டனிங் முறை
- அந்தரங்க உறுப்புகளுக்கான (தொடைகளுக்கு உட்புறம், நீச்சல் உடை அணியும் பகுதி உட்பட) லைட்டனிங் சிகிச்சை
ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
- எனக்கு வயதாக வயதாக ஏன் என் சருமம் கருப்பாகிறது?
வயதாகும்போது, உங்கள் சருமம் தன்னைத்தானே புதுப்பிக்கும் சக்தியை இழக்கிறது. சருமத்தின் அடியில், மேல்அடுக்குகளில் மெலனின் சேர்ந்து கொள்கிறது. பல ஆண்டுகளாக இவ்வாறு சேருவதால், சருமத்தின் மேல் பகுதி கறுப்பாக மாறுகிறது. - ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை பாதுகாப்பானதா?
ஆம். மெலனினை கட்டுப்படுத்த ஸ்கின் லைட்டனிங் லேசர், கெமிக்கல் பீல் மற்றும் லைட்டனிங் சிகிச்சைக்கான ஊசிகளும் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எனினும் உங்களுடைய சருமத்திற்கு ஏற்றதா என்பதை ஒரு தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக்கொள்வது நல்லது. - ஸ்கின் லைட்டனிங் முறையில் சருமத்தின் தோல் உரிக்கப்படுகிறதா?
ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைக்காக பல முறைகளைப் பயன்படுத்தி சருமத்தை சீராக மாற்றியமைக்கிறது. அவற்றுள் இதுவும் ஒன்று. - அக்குள் பகுதிக்கு ஸ்கின் லைட்டனிங் செய்ய எத்தனை முறை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்?
அக்குள் பகுதிக்கு 6 முதல் 8 முறை இந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும்.
ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை பற்றிய இந்த விவரங்கள் பயனுள்ளவையாகவும் சுவாரசியமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறோம். கோடைகாலத்தில் கறுத்துவிடக்கூடிய சருமத்திலிருந்து கறுமையை நீக்கி சருமத்தை சீராக மாற்றி உற்சாகமாக உலா வர விரும்பினால் அருகில் உள்ள ஸ்கின் கிளினிக்கிற்கு சென்று விவரங்கள் பெற்று சிகிச்சை பெறத் திட்டமிடவும்.