முடி மீண்டும் வளர்வதற்கு மிகச் சிறந்த சிகிச்சை எது?
ஏறக்குறைய 2.1 கோடி பெண்களும் 3.5 கோடி ஆண்களும் தலைமுடி கொட்டும் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆண்களுக்கு கிட்டத்தட்ட 35 வயதாகும் போதே 40% முடி கொட்டத் தொடங்குகிறது. அவர்களுக்கு 80 வயதாகும்போது 70% முடியை இழந்து விடுகின்றனர். பெண்களுக்குப் பெரும்பாலும், 60 வயது ஆகும் சமயத்தில் 80% முடி கொட்டிவிடுகிறது. ஆனால் தற்போதுள்ள மேம்பட்ட மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முறைகள் / சிகிச்சைகளால் இதற்குப் பல நிவாரணங்கள் வந்துள்ளன. முடி கொட்டுவதற்கும் முடி மெலிந்து போவதற்கும், அந்த இடத்தில் தடவக்கூடிய சொல்யூஷன்கள், உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள், அறுவை சிகிச்சை இல்லாத வேறு சிகிச்சைகள் போன்ற பலப்பல சிகிச்சைகள் தற்போது உள்ளன. இவற்றுள் பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா தெரபி எனப்படும் PRP சிகிச்சை மிகவும் பிரபலமான ஒன்று. இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. நல்ல பலன்களும் கிடைக்கின்றன.
முடி கொட்டுவதைத் தடுப்பதற்கான, இந்தியாவில் கிடைக்கும் சிகிச்சைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்:
மீஸோதெரபி – PRP ஒரு ஒப்பீடு
மீஸோதெரபி, PRP சிகிச்சையிலிருந்து இரண்டு விதங்களில் வேறுபடுகிறது. 1. மீஸோதெரபி சிகிச்சையில் மிகவும் மேலாக மட்டுமே ஊசிகள் செலுத்தப்படுகின்றன. 2. PRP சிகிச்சையில் பிளேட்லெட்கள் செறிவாக உள்ள பிளாஸ்மா உள்ளே செலுத்தப்படுகிறது. மீஸோதெரபி சிகிச்சையில் மினாக்ஸிடில், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், வளர்ச்சிக்கு உதவும் பொருட்கள் செலுத்தப்படுகின்றன.
- PRP மற்றும் மீஸோதெரபி சிகிச்சை இரண்டுமே 1970களிலிருந்தே செய்யப்படுகின்றன. ஆனால் மீஸோதெரபியை விட PRP சிகிச்சை முறைகள் குறித்துப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் பலன்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீஸோதெரபி 1970லிருந்தே செய்யப்பட்டு வந்தாலும், அதன் பாதுகாப்பு மற்றும் பலன்கள் குறித்து போதுமான அளவு அறிவியல் பூர்வமான தகவல்கள் இல்லை. தோல் மருத்துவர்களும் PRP பலவிதங்களில் மீஸோதெரபியை விடப் பாதுகாப்பானது என்று கருதுகின்றனர்.
- மீஸோதெரபியுடன் ஒப்பிடும்போது PRP சிகிச்சைக்கு குறைந்த நேரம்தான் ஆகும். மேலும் PRPக்கான கட்டணமும் அதை விடக் குறைவுதான்.
- PRP மிக மிகப் பாதுகாப்பானது; சிகிச்சை பெறுபவரின் பிளேட்லெட்களையே பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை; ஆனால் மீஸோதெரபி சிகிச்சையில், பலவிதமான உட்பொருட்கள் கொண்ட மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதால் பக்க விளைவுகள் இருக்கலாம்.
- முடி மாற்றுப் பொருத்தும் சிகிச்சை செய்யும்போது PRPயும் சேர்ந்து செய்ய முடியும்; மீஸோதெரபியை அவ்வாறு இணைத்து செய்ய முடியாது.
PRP – ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு ஒப்பீடு
பிளேட்லெட்களைப் போலவே ஸ்டெம் செல்களும் காயமடைந்த மற்றும் வீக்கம் உள்ள திசுக்களை குணப்படுத்துகின்றன. இந்த ஸ்டெம் செல்கள் உடலுக்கு தேவையான எந்த செல்லாகவும் எப்போது வேண்டுமானாலும் மாற முடியும். இந்த ஒரு குணத்தினால் தான் இவை தற்போது மிகப் பிரபலமாகி வருகின்றன. தலை மண்டைப் பகுதியில் ஸ்டெம் செல்களை செலுத்தும்போது அங்கேயுள்ள காயப்பட்ட, பாதிக்கப்பட்ட செல்களுக்கு பதிலாக இவை அங்கே அந்த செல்களாகப் பணி புரியத் தொடங்குகின்றன. இந்த அடிப்படையில், குணப்படுத்தவே முடியாத அளவு பாதிக்கப்பட்ட செல்கள் கூட மாற்றப்படுகின்றன. முடி கொட்டுவதற்கு PRP சிகிச்சை அளிப்பதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் இவைதான்:
- PRP சிகிச்சையில், பிளேட்லெட்கள் செறிந்துள்ள பிளாஸ்மா, சிகிச்சை செய்து கொள்பவரின் உடலிலிருந்தே எடுக்கப்படுகின்றன. ஆனால் ஸ்டெம் செல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஸ்டெம் செல்கள், ஆய்வகங்களில், எலிகளின் முடி மற்றும் பச்சை ஆப்பிள்களிலிருந்தும், சரியாக வளர்ச்சியடையாத கருமுட்டைகள், கரு இவற்றிலிருந்து கிடைக்கின்றன.
- PRP சிகிச்சையில் அதே நபரின் பிளேட்லெட்களும் பிளாஸ்மாவும் பயன்படுத்தப்படுவதால் உடலால் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஸ்டெம் செல் சிகிச்சையில் அப்படிக் கூற முடியாது.
- சென்ட்ரிஃப்யூகேஷன் முறைக்குப் பிறகு உடனடியாக PRP செலுத்தப்படுவதால் அதில் நல்ல வீரியத்துடன் கூடிய பிளேட்லெட்கள் இருப்பது உறுதியாகிறது.
ஆனால் ஸ்டெம் செல் தெரபியில் அவை உருவாக்கப்பட்டு, சிகிச்சை தரும் இடத்திற்கு வந்து சேருவதற்கான காலம் வரை அந்த ஸ்டெம் செல்கள் கட்டாயம் உயிரோடு இருக்குமா என்பது நிச்சயம் இல்லை. முடி வளர்வதற்கான சில காரணிகள் இருக்கலாம். ஆனால் PRP அளவு இவை பலன் தருவதில்லை.
PRP – முடி மாற்றிப் பொருத்தும் சிகிச்சை – ஓர் ஒப்பீடு
முடிமாற்றிப் பொருத்தும் (Hair transplants) சிகிச்சை என்பது ஒரு அறுவை சிகிச்சையை ஒத்து செய்யப்படுகிறது. அவரின் தலை மண்டைப் பகுதியில் (பக்கவாட்டுப் பகுதி அல்லது பின்பகுதி) இருந்து ஒரு சிறிய அளவு தோல் எடுக்கப்பட்டு (hair grafts) அது பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்படும்: அதாவது தலையின் ஒரு பகுதியிலிருந்து முடியை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து முடி வளர வழி செய்யப்படுகிறது.
முக்கிய வேறுபாடுகள்:
- PRP என்பது அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறை. தேவைப்பட்டால் அதிகபட்சமாக அந்த இடத்திற்கு மட்டும் லோக்கல் அனஸ்தீஷியா கொடுக்கப்படலாம். முடிமாற்றுப் பொருத்தும் சிகிச்சை அப்படிப்பட்டது அல்ல.
- ஹேர் டிரான்ஸ்பிளான்ட்ஸ் அதாவது முடிமாற்றுப் பொருத்தும் சிகிச்சையில் சில சமயம் நமது தலைப் பகுதியே, பொருத்தப்படும் சருமத்தை நிராகரிக்கலாம். அப்போது சிகிச்சை பலன் அளிக்காது. PRPயில் அவரது பிளேட்லெட்களைப் பயன்படுத்துவதால், நிராகரிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
- இந்த இரண்டு சிகிச்சைகள் தரும் பலன்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. முடி முழுவதும் கொட்டி, வழுக்கை விழுந்து முடி மீண்டும் வளர முடியாத நிலையில், முடி மாற்றுப் பொருத்துதல்தான் ஒரே வழி. PRPயால் பலன் இருக்காது. PRP சிகிச்சை நமது மயிர்க்கால்களை நன்கு தூண்டி, ஆரோக்கியமாக முடி வளர வழி செய்யும். முடி மெலிந்துபோகும் இடங்களிலும் முடி வளர இந்த சிகிச்சை வழி செய்கிறது.
சற்று சுவாரசியமான விஷயங்கள்:
PRP VS பிற சிகிச்சைகள் முடி கொட்டுவதை நிறுத்த சிகிச்சைகள்
PRP – லேசர் சிகிச்சை – ஒரு ஒப்பீடு
- PRP, சிகிச்சை பெறுபவரின் இரத்தத்திலுள்ள பிளேட்லெட்களையே பயன்படுத்துகிறது. சென்ட்ரிஃப்யூஜ் முறையைப் பயன்படுத்தி, தலையில் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள செல்கள் இயங்க வைக்கப்படுகின்றன. அப்போது முடி கொட்டுவது நின்று முடி வளருகிறது. லேசர் சிகிச்சையில் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை (wave length) உடைய ஒளிக்கற்றையை, பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தி அங்கே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றனர். அப்போது முடி கொட்டுவது குறைந்து, முடி வளருகிறது.
- லேசர்கள் வீக்கத்தை குறைத்து, முடியின் செல்களுக்கு சக்தியை வழங்குகின்றன (ATP). PRP சிகிச்சையில் முடி வளருவதை உறுதி செய்யப் பல்வேறு விதமான காரணிகள் வழங்கப்படுகின்றன / தூண்டப்படுகின்றன.
- இவை இரண்டையும் ஒப்பிடும்போது இரண்டுமே பிரச்சனையை ஏறக்குறைய ஒரே கோணத்தில் அணுகுவது தெரியும். இரண்டுமே தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆயினும் PRPயில் பலன்கள் சற்று விரைவாகத் தெரிய ஆரம்பிக்கின்றன.
PRP – PRFM சிகிச்சை – ஒரு ஒப்பீடு
பிளேட்லெட் ரிச் ஃபைப்ரின் மேட்ரிக்ஸ் – PRFM சிகிச்சை என்பது PRPயின் ஒரு மேம்படுத்தப்பட்ட அதிநவீன சிகிச்சைமுறை எனக் கொள்ளலாம் ஃபைப்ரின்கள் என்பது இரத்தம் உறையும்போது உண்டாகும், கரையாத, புரோட்டீன்கள் இவை பிளாஸ்மாவில் காணப்படும். இவை பிளேட்லெட்களுடன் இணைந்துதான் காயங்களை ஆற்றுகின்றன. PRFM சிகிச்சையில் மேலும் வீரியத்துடன் கூடிய (ஆக்டிவேட் செய்யப்பட்ட, சென்ட்ரிப்யூஜ் செய்யப்பட்ட) பிளேட்லெட்கள் சேர்க்கப்பட்டு ஒரு அடர்த்தியான ஃபைப்ரின் அமைப்பு (Fibrin matrix) உருவாக்கப்படுகிறது. ஒரு anticoagulant உடன் (இரத்த உறைவுத் தடுப்பான்) இரத்த சாம்பிளை கலக்காமல் வைத்திருந்து இதைப் பெற முடியும்.
இந்த PRFM சிகிச்சை, முடி கொட்டுதலுக்கான மிக மிக நவீன சிகிச்சை. இதை பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு ஊசி மூலம் செலுத்துவார்கள். அப்போது அங்கு திசுக்கள் புத்துயிர் பெறுகின்றன, செழித்து வளர்கின்றன (Proliferation & tissue regeneration) முடி கொட்டுவது நின்று, முடி நன்கு வளரத் தொடங்குகிறது. PRP மற்றும் PRFM இரண்டுமே மிகச் சிறந்த சிகிச்சைகள். 4-6 முறைகள் செய்த பிறகு நல்ல பலன்களைத் தரும்.
PRFM சிகிச்சை, PRP சிகிச்சையிலிருந்து சற்றே மாறுபட்டது. எனினும் இரண்டுமே நல்ல பலன் தரக்கூடியவை.
PRP சிகிச்சை – மினாக்ஸிடில் ஒரு ஒப்பீடு
மினாக்ஸிடில் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்தாகவும், சில சமயம் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. முடி கொட்டுவதற்கு இதைப் பயன்படுத்தும்போது, அதன் அளவு, பயன்படுத்தும் முறை போன்றவற்றை தோல் மருத்துவர் தான் கூற வேண்டும். மினாக்ஸிடில் மருந்து ஒரு வேஸோ டயலேட்டர் (இரத்தக் குழாய்களை விரிவாக்க கூடியது). PRP சிகிச்சை மற்றும் மினாக்ஸிடில் சிகிச்சை ஆகிய இரண்டுமே முடி வளர்வதற்கான மிகச் சிறந்த சிகிச்சைகளாக இருந்தாலும், ஆய்வுகளின்படி PRP சிகிச்சையை மினாக்ஸிடில்லுடன் இணைந்து செய்யும்போது அதிக பலன்கள் கிடைக்கின்றன. இது மினாக்ஸிடில் மட்டும் தரக் கூடிய பலனை விட அதிகமாக உள்ளது.
ஒருமுறை ஆன்ட்ரோஜெனிக் அலோபேசியா உள்ள 20-50 வயதுள்ள 220 ஆண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களை 2 குழுவினராகப் பிரித்தார்கள். ஒரு குழுவிற்கு PRP சிகிச்சை தரப்பட்டது. மற்றொரு குழுவினருக்கு மினாக்ஸிடில் (5-10%) வழங்கப்பட்டது. முடிவுகளின்படி, PRP சிகிச்சை வழங்கப்பட்டவர்களுள் 76% பேருக்கு, நல்ல பலன்கள் தெரிந்தன. மினாக்ஸிடில் கொடுத்தவர்களில் 48% பேருக்கு நல்ல பலன்கள் தெரிந்தன.
ஆனால் இன்னும் பல ஆய்வுகள் இரண்டையும் இணைந்துத் தந்தால் இதைவிட சிறந்த பலன்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளன. பொதுவாக மினாக்ஸிடில்லுடன் இணைந்து தரப்படும் adjunctive சிகிச்சையாகவே PRP பரிந்துரைக்கப்படுகிறது.
PRP – ஃபினாஸ்டெரைட் – ஓர் ஒப்பீடு
ஃபினாஸ்டெரைட் என்பது 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் என்சைம் இன்ஹிபிட்டர் – நமது உடலின் நொதிகளைக் கட்டுப்படுத்தக்கூடியது. இது ஆண்களுக்கு மட்டுமே, முடி கொட்டும் சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதி உள்ளது. அதுவும் 1 மிகி மட்டுமே பயன்படுத்த வேண்டும். மினாக்ஸிடில் போலவே இதுவும் உட்கொள்ளும் மருந்தாகவும், தடவும் மருந்தாகவும் தரப்படுகிறது.
முக்கிய வேறுபாடுகள்:
- ஃபினாஸ்டெரைட் ஆண்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது. PRP ஆண்/பெண் இருபாலாருக்கும் செய்யக்கூடிய சிகிச்சை.
- PRP மிகவும் பாதுகாப்பானது. இதுவரை பெரிய பக்கவிளைவுகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஃபினாஸ்டெரைட் தனியாகப் பலனளிக்காது. மேலும் ஏதேனும் சில பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற பயத்தில், பலர் இதை எடுத்துக் கொள்ளத் தயங்குகின்றனர்.
தவறாது பார்க்கவும் – தலைமுடி மீண்டும் வளர்வதற்கான மிகச் சிறந்த சிகிச்சை எது?
முடி கொட்டுவதற்கு PRP ஒரு நிரந்தரத் தீர்வு தருமா?
முடி கொட்டுவது என்பது மிகப் பெரிய பிரச்சனைதான். அதனைத் தீர்ப்பது பெரிய சவால்தான். ஆனால் தற்போதுள்ள பல சிகிச்சை முறைகள் மூலம் கட்டாயம் அதற்குத் தீர்வு உண்டு. மரபணுக்கள் காரணமாக தலைமுடி கொட்டினால், அப்போது PRP சிகிச்சை அளித்தால், நிரந்தரமாகப் பலன் கிடைக்காது போகலாம், ஆனாலும் நீண்டநாள் பலன் கிடைக்கும். மருத்துவ ரீதியாகப் பிரச்சனைகள் இருந்து முடி கொட்டினால் கட்டாயம் PRP நிரந்தர தீர்வுகளைத் தரும். இதன் மூலம் பெற்ற பலன்களை, தொடர்ந்து மினாக்ஸிடில் எடுத்துக் கொள்வதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளலாம், பராமரிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இன்றே ஒலைவா கிளினிக்கிற்கு வாருங்கள். அதிநவீன வசதிகள் மிக்க எங்கள் கிளைகள் ஹைதராபாத், பெங்களூர், சென்னை, கொல்கத்தா, பூனா, விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ளன.