முடி இழத்தலைத் தடுக்க PRP சிகிச்சை, அதற்கான கட்டணம், செயல்முறை, வெற்றி விகிதம்.
பிளேட்லெட்கள் செறிவுமிக்க பிளாஸ்மா (PRP) சிகிச்சை முறை – ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தொடர்ந்து முடி கொட்டுதல், தலைமுடி மிகவும் மெலிந்து போகுதல், சொட்டை / வழுக்கை விழுதல், இவை போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு மேம்பட்ட சிகிச்சை முறையாக இச் சிகிச்சை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதன்மூலம் மிகத் திறம்பட இயற்கையான முறையில் முடி மீண்டும் வளருகிறது. இந்த செயல்முறை / சிகிச்சைமுறை பற்றிய விவரங்கள், அதற்கான செலவு மற்றும் கிடைக்கும் பலன்கள் பற்றி அறிந்துகொள்ளலாம்:
தலைமுடிக்கான PRP சிகிச்சை பற்றி அறிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்
- சிகிச்சை தரப்படும் இடங்கள் – நீங்கள் ஹேர் கிளினிக்குகளில் PRP சிகிச்சையைப் பெறலாம்.
- வலி – இதில் குறைந்தபட்ச ஊடுருவல் மட்டுமே இருப்பதால் (Minimally invasive) வலியே இருக்காது என்று கூறலாம்.
- ஆபத்துக் காரணிகள் – PRP சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. இரத்தக் கசிவு, ஒவ்வாமை, தொற்று ஏற்படுதல் போன்ற எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லை.
- சிகிச்சைக்கான கால அளவு – தலைமுடி சிகிச்சை வல்லுநர்கள் (Trichologists) இதை 6 முதல் 8 முறை செய்ய வேண்டும் என்றும், ஒரு முறைக்கும் அடுத்த முறைக்கும் 1 மாதம் இடைவெளி தேவை என்றும், ஒவ்வொரு முறையும் 1 முதல் 1½ மணி நேரம் சிகிச்சை வழங்கப்படும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.
- இது எவருக்கெல்லாம் மிகவும் உகந்தது – ஒரு குறிப்பிட்ட வகையில் முடி கொட்டுபவர்கள், அல்லது ஆண்ட்ரோஜெனடிக் அலோபேசியா உள்ளவர்கள் இந்த PRPயை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் தலைமுடி சிகிச்சை மருத்துவர், உங்களை முழுவதும் பரிசோதனை செய்து, உங்களது மருத்துவப் பின்னணியை நன்கு அறிந்து கொண்டு, ட்ரைகோஸ்கோபி பரிசோதனையும் செய்து பிறகு தான் இதைப் பரிந்துரைப்பார். இதை எடுத்துக்கொள்ள குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
- பரிசோதனைகளும், மருந்துகளும் – இதற்கு இரத்தப் பரிசோதனை அவசியம். பிறகு உங்கள் தோல் மருத்துவர் கூடுதல் மருந்துகளை எழுதிக் கொடுப்பார்.
- பலன்கள் – முதல் சிகிச்சை முடிந்த 3 மாதங்களுக்கு பிறகு பலன்கள் நன்கு தெரியத் தொடங்கும்.
PRP சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது
இந்த PRP சிகிச்சை 4 முக்கிய நிலைகளில் செய்யப்படுகிறது –
ப்ளேட்லெட் செறிவுமிக்க பிளாஸ்மா (PRP) சிகிச்சை
முடி கொட்டிய இடத்தில் இயற்கையாக முடி மீண்டும் வளர அறுவை சிகிச்சை அற்ற ஒரு சிகிச்சைமுறை.
- சிறிதளவு இரத்தம் சேகரித்தல்: PRP சிகிச்சைமுறையின் முதல்படியாக, உங்கள் மருத்துவர் உங்கள் உடலிலிருந்து 20 மிலி இரத்தத்தை சேகரிப்பார்.
- பிளேட்லெட்களைப் பிரித்தெடுத்தல்: தோல் மருத்துவர்கள், சென்ட்ரிஃப்யூஜ் என்னும் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த இரத்தத்திலிருந்து பிளேட்லெட்களைப் பிரித்தெடுப்பார்கள் வளர்ச்சிக்கான காரணிகள் அதிகம் உள்ள பிளேட்லெட்டுகளை எடுக்க இரட்டைச் சுழல் முறை உதவிசெய்கிறது.
- இரத்தத்திலிருந்து PRPயை பிரித்தெடுத்தல் மற்றும் இயங்க வைத்தல் (ஆக்டிவேஷன்): மீதமுள்ள, பிளேட்லெட்கள் மிகக் குறைவாக உள்ள பிளாஸ்மா (PPP) விலிருந்தும் சிவப்பணுக்களிலிருந்தும் PRPயைப் பிரித்து எடுப்பார்கள். சிகிச்சை பெறுபவரின் தலையில் PRPயை ஊசி மூலம் செலுத்துவதற்கு முன்பாக தலைமுடி சிகிச்சை வல்லுநர்கள், ஒரு ஆக்டிவேட்டிங் ஏஜென்ட் பயன்படுத்தி பிளாஸ்மாவில் உள்ள வளர்ச்சிக்கான காரணிகளை நன்கு செயல்பட வைப்பார்கள்.
- பாதிக்கப்பட்ட இடத்தில் PRPயை ஊசி மூலம் செலுத்துதல்: கடைசி நிலையில், இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட PRPயை தோல் மருத்துவர், தலைமண்டைப் பகுதியில் பாதிக்கப்பட்ட இடத்தில், பாதுகாப்பாக செலுத்துவார். இதற்கு மிக நுண்ணிய (மைக்ரோ) ஊசிகளைப் பயன்படுத்துவார். இதை செலுத்துவதற்கு முன்பாக அந்த இடத்தில் உணர்விழக்கச் செய்யும் (லோக்கல் அனஸ்தீஷியா) கொடுப்பார். எனவே உங்களுக்கு சிறிதும் வலி தெரியாது.
#PRP முடி வளரும் சிகிச்சை என்பது மிகப் பாதுகாப்பான, அறுவை சிகிச்சை தேவையற்ற சிகிச்சை முறை. முடி கொட்டுவதை இது மிகத் திறம்படக் கட்டுப்படுத்துகிறது. இந்த வீடியோவைப் பார்த்தும் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
இப்போது PRP சிகிச்சை முறை பற்றி அனைத்தும் தெரியும் என்பதால், அதற்கு ஆகக்கூடிய செலவு / கட்டணம் பற்றிப் பார்க்கலாம்.
இந்தியாவில் PRP சிகிச்சைக்கான கட்டணங்கள்
இந்தியாவில் தலைமுடிக்கான PRP சிகிச்சைக்கான கட்டணம் சராசரியாக ஒரு அமர்வுக்கு ரூ.4,500 முதல் ரூ.15,000 வரை ஆகலாம். பல கிளினிக்குகளில் ஏறக்குறைய இந்த அளவு ஆகலாம். இந்தக் கட்டணம் கீழ்க்கண்ட விஷயங்களைச் சார்ந்து மாறுபடலாம்:
- தோல் மருத்துவரின் அனுபவம் அல்லது கிளினிக்கின் புகழ்
- இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சாதனங்களின் தரம்
- சிகிச்சைக்கு எத்தனை முறை வரவேண்டும்
இந்தியாவில் PRP தலைமுடி சிகிச்சைக்கு ஒரு அமர்வுக்கான கட்டணம்
நகரம் | குறைந்தபட்சம் | அதிகபட்சம் |
ஹைதராபாத் |
Rs 5,000 | Rs 12,000 |
பெங்களூர் |
Rs 5,300 | Rs 13,500 |
சென்னை |
Rs 4,800 | Rs 12,500 |
பூனா |
Rs 5,000 | Rs 14,000 |
கொல்கத்தா |
Rs 5,250 | Rs 13,000 |
கொச்சி |
Rs 5,000 | Rs 12,000 |
விசாகப்பட்டினம் |
Rs 4,700 | Rs 11,500 |
மும்பை |
Rs 4,500 | Rs 14,000 |
தில்லி | Rs 4,000 | Rs 15,000 |
* இந்தியாவில் பல நகரங்களில் அமைந்துள்ள, PRP தலைமுடி சிகிச்சை வழங்கும் பிரபலமான கிளினிக்குகளின் கட்டணங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது.
PRP தலைமுடி சிகிச்சையின் வெற்றி விகிதமும் அதைப் பற்றிய சில கருத்துக்களும்.
முடி கொட்டுதல், முடி மெலிந்து போகுதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வழுக்கை / சொட்டை விழுதல் போன்ற பிரச்சனைகளுக்கு, உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின்படி PRP சிகிச்சைமுறை மிகவும் வெற்றிகரமான, அறுவை சிகிச்சை இல்லாத மிகச் சிறப்பான சிகிச்சை முறையாக குறிப்பிடப்படுகிறது. இந்த சிகிச்சை முறையின் விளைவாக, முடி வளரும் காலம் அதிகரிக்கும், முடி கொட்டுவதைக் கட்டுப்படுத்தும், ஓரளவு முடி மெலிவதைக் கட்டுப்படுத்தும், இவை அனைத்தும் ஏற்படுவதால் இயற்கையாக முடி மீண்டும் வளர்ந்து வழுக்கையான பகுதி மறையத் தொடங்கும். முதல் சில அமர்வுகளுக்குப் பிறகு முடி கொட்டுவது குறைவதைப் பார்க்கலாம். இந்த சிகிச்சை தொடங்கி 3வது அமர்வுக்குப் பிறகு நன்கு மீண்டும் முடி வளர்வதைப் பார்க்க முடியும்.
உங்களுக்கு முடி கொட்டும் அளவு, முடி மெலிந்து போகும் அளவு ஆகியவற்றை பரிசோதித்து அதன் அடிப்படையில் உங்களுக்கு PRP சிகிச்சை எத்தனை அமர்வுகள் தேவை என்பதை தோல் மருத்துவர் முடிவு செய்வார். பிறகு பராமரிப்பிற்காக சில அமர்வுகள் தேவையா என்றும் அவர் முடிவு செய்வார். இவற்றுடன் அந்த இடத்தில் தடவக்கூடிய மருந்துகள், எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகள் போன்ற கூடுதல் மருத்துவ சிகிச்சைகளைப் பற்றியும் கூறுவார்.
2015ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கீழ்க்கண்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தாலியில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வழுக்கை விழுந்த ஆண்களுக்கு PRP சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு, தலையில் அந்த இடத்தில் அவர்களுக்கு முடி அடர்த்தியாகத் தொடங்கியது. 3 மாதங்களில் பலன்கள் தெரிய ஆரம்பித்தன. இந்த சிகிச்சையின் எளிமை, பாதுகாப்பான முறை, சரியான கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வடிவில் வழுக்கை விழும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த PRP சிகிச்சை முறை மிகச் சிறந்த, செய்யத்தக்க ஒரு சிகிச்சைமுறை என்று கருதுகின்றனர். கட்டாயமாக இதனுடன் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இந்த சிகிச்சைக்கு முன்பும் பின்பும் பலன்கள் எப்படி இருக்கும்?
கீழே சிகிச்சைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளன. PRP சிகிச்சைக்குப் பிறகு, அந்த இடத்தில் முடி வளர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதில் தெரிவது போல வழுக்கையின் ஆரம்ப நிலையிலேயே, PRP சிகிச்சை வழங்கப்படும்போது, முடி கொட்டுவது நன்கு கட்டுப்படுத்தப்படும். ஆனால் இதன் பலன்கள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம்.
- ஒலிவாவில் சிகிச்சை எடுத்துக் கொண்ட நபர்
- பலன்கள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்
PRP சிகிச்சையை யார் எடுத்துக் கொள்ளக்கூடாது?
கீழ்க்கண்டவர்களுக்கு தலைமுடிக்கான PRP சிகிச்சை பொருந்தாது –
- மிகவும் அதிகம் புகை பிடிப்பவர்கள்
- பிளேட்லெட் டிஸ்ஃபங்ஷன் சிண்ட்ரோம், த்ராம்போசைடோடீனியா, ஹைபோஃபைப்ரினோஜெனாடியா, ஹீமோடைனமிக் இன்ஸ்டெபிலிடி, செப்ஸிஸ் போன்ற நோய்கள் இருப்பவர்கள் தீவிரமான தொற்று நோய்கள், நீண்டகாலமாக கல்லீரல் நோய் உள்ளவர்கள் மற்றும் சிலவகையான புற்று நோய் உள்ளவர்கள் PRP சிகிச்சை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் இரத்தத்தை நீர்க்கச் செய்வதற்கான மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களும் ஆன்டிகோஆகுலேஷன் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளக்கூடாது. மிகத் தீவிரமா முடி கொட்டுதல், முடி மெலிதல், வழுக்கை போன்றவற்றுக்கு PRP சிகிச்சை மிகப் பாதுகாப்பான, அறுவை சிகிச்சை இல்லாத சிகிச்சைமுறை. உங்களுக்கு முடி கொட்டுவது அதிகமானாலோ, வழுக்கை விழத் தொடங்கினாலோ இன்றே அனுபவம் மிக்க ஒரு தலைமுடி சிகிச்சை நிபுணரை ஆலோசிக்கவும். PRP சிகிச்சை உங்களுக்கு உகந்ததா என்று தெரிந்துகொள்ளவும்