இந்தியாவில் வடுக்களை நீக்கும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகலாம்?
பருக்களால் ஏற்படும் வடுக்கள், தீக்காயத்தினால் உண்டாகும் வடுக்கள், விபத்துக்களில் ஏற்படும் வடுக்கள், திட்டுக்களால் ஏற்படும் வடுக்கள் போன்றவற்றை நீக்க பல்வேறு தோல் கிளினிக்குகளில் பல வகையான சிகிச்சைகள் தற்போது உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் இத்தகைய சிகிச்சைகள் பெறுவது பற்றி மேலும் தெரிந்துகொள்ள, அவற்றுக்கு ஆகக்கூடிய செலவு இவை பற்றியும் அறிய இந்த கட்டுரையைப் படிக்கவும். மேலும் வேறு பல சிகிச்சைகளை விட ஏன் இந்த லேசர் சிகிச்சை சிறந்தது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
நாம் ஏன் வடுக்களை நீங்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்?
கீழ்க்கண்ட வகையான ஏதாவது வடுக்கள் இருந்தால் நீங்கள் அதை நீக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
-
பருக்களால் வரும் வடுக்கள்:
உங்களுக்கு 13-19 வயதிருந்தால், அல்லது கிட்டத்தட்ட அந்த வயதை ஒத்து இருந்தால், அடிக்கடி பருக்கள் வந்தால் வடுக்கள் ஏற்படலாம். அத்தகைய வடுக்கள் பலவகைப்படும். அவற்றின் தோற்றம், ஆழமான வடு, V வடிவத்தில் உள்ளே இறங்கும்படி வடு, ஒழுங்கில்லாத ஒரு வடிவத்தில் உள்ள வடு, மேடுபள்ளமாய் உள்ள வடு என பல வகையில் வடுக்கள் இருக்கலாம். இவை தோற்றத்திற்குக் கேடு விளைவிப்பதுடன் உங்கள் சருமத்தின் தன்மையையே மாற்றிவிடலாம். எனவே இவற்றுக்கான சரியான சிகிச்சைகளுக்குப் பலத்த வரவேற்பு உள்ளது.
-
பிற வடுக்கள்:
பருவினால் மட்டும் இன்றி காயம், தீப்புண், வெட்டுக்காயம், ஆழமான கீறல்கள், பெரியம்மை, அறுவை சிகிச்சைகள் (உதாரணம் சிசேரியன்) மற்றும் தையல் போடுதல் போன்றவை காரணமாகவும் வடுக்கள் ஏற்படலாம்.
வடு நீக்கும் சிகிச்சை எப்படிப் பலன் தரும்?
வடு ஏற்பட்ட திசுக்களை சரிசெய்ய தற்போது பல மேம்பட்ட அதிநவீன சிகிச்சைகள் உள்ளன. பெரும்பாலும் இத்தகைய வடு நீக்கும் சிகிச்சைகளை அறுவை சிகிச்சை அற்றது, அறுவை சிகிச்சையுடன் கூடியது என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றுக்கும் கட்டணமும் பலன்களும் வேறுபடும். லேசர் சிகிச்சை முறை இவைகளுள் எப்படி சிறப்பானது என்பதைத் தெரிந்து கொள்ள, அந்த சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்பதையும் அதன் பலன்களையும் மிக விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வடுக்களை நீக்க லேசர் சிகிச்சை எப்படி செயல்படுகிறது?
லேசர் முறையில் மிக அதிக அடர்த்தியுள்ள ஒளிக்கற்றைகளின் சக்தி, தேவைப்படும் இடத்தை குறி வைத்து மிகக் கவனமாக, தகுந்த கட்டுப்பாடுடன் செலுத்தப்படுகின்றன. சருமத்தின் ஆழத்தில் உள்ள படிமங்கள், இதனால் உண்டாகும் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்கின்றன.
அவ்வாறு செய்யும்போது ஃபைபர் பிளாஸ்ட் செல்கள் தூண்டப்பட்டு கொலாஜன் சுரக்கிறது. அதன் விளைவாக பாதிக்கப்பட்ட திசுக்கள் முற்றிலும் சரி செய்யப்படுகின்றன. இதனால் வடுக்கள் வெளியே தெரிவதில்லை. உங்கள் சருமத்தின் தன்மையும் மேம்படுகிறது.
பருக்கள் மூலம் வரக்கூடிய அனைத்து விதமான வடுக்களையும் லேசர் சிகிச்சையால் குணப்படுத்த முடியும் (அட்ராபிக் மற்றும் ஹைபர்ட்ராபிக் உட்பட) இதன்மூலம் பெரியம்மைத் தழும்புகளையும் குணப்படுத்த முடியும். உங்கள் வடுவை நன்கு பரிசோதித்து, தோல் மருத்துவர், தனியாகவோ மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்தோ இதைப் பரிந்துரைக்கலாம்.
பல்வேறு விதமான வடுக்களை குணப்படுத்த எத்தனை விதமான சிகிச்சைகள் உள்ளன என்பதை வீடியோவைப் பார்த்தால் மேலும் விவரமாக அறியலாம்.
பருக்களால் ஏற்படும் வடுக்களுக்கான லேசர் சிகிச்சைக்கு ஆகும் செலவு
இந்தியாவில் வடுக்களை நீக்குவதற்கான லேசர் சிகிச்சைக்குரிய கட்டணம், ஒருமுறைக்கு ரூ.7,000 முதல் ரூ.20,000 வரை ஆகலாம். வடுவின் அளவைப் பொருத்து இது மாறலாம். மேலும் வடுவின் காரணம், தீவிரம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறை, எத்தனை முறை செய்யவேண்டும் என்ற காரணங்களின் அடிப்படையில் இந்தக் கட்டணங்கள் மாறலாம்.
பிற வடுக்கள் / தடங்கள் போன்றவற்றுக்கான லேசர் சிகிச்சை
- அம்மைத் தழும்புகளை நீக்குவதற்கான லேசர் சிகிச்சைக்கு ரூ.6,000 முதல் ரூ.20,000 வரை செலவாகலாம்.
- தீப்புண்களால் ஏற்பட்ட வடுக்களுக்கு லேசர் சிகிச்சை பேக்கேஜுக்கு ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை செலவாகலாம்.
- விபத்து / காயங்கள் இவற்றால் ஏற்பட்ட வடுக்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை செலவாகலாம்.
மேற்கூறிய கட்டணங்கள் ஒரு குறிப்பிற்காக மட்டுமே. இது ஒவ்வொரு கிளினிக்கிற்கும் அது அமைந்துள்ள இடம், அது எந்த அளவு பிரபலமானது, தோல் மருத்துவரின் அனுபவம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறை போன்றவை பொருத்து இவை மாறலாம். லேசர் மூலம் வடுக்களை நீக்க ஆகக்கூடிய செலவைப் பற்றி புகழ்பெற்ற ஒரு ஸ்கின் கிளினிக்கிற்கு நேரில் சென்று தெரிந்து கொள்வது நல்லது.
இந்தியாவில் பல நகரங்களில் லேசர் சிகிச்சைக்கான கட்டணங்களின் பட்டியல்:
லேசர் மூலம் பருவின் வடுக்களை நீக்குதல் (கட்டணம் / ஒருமுறை செய்வதற்கு) | ||
நகரம் | குறைந்தபட்சம் | அதிகபட்சம் |
பெங்களூர் | Rs 7,000 | Rs 20,000 |
சென்னை | Rs 7,000 | Rs 20,000 |
ஹைதராபாத் | Rs 7,000 | Rs 20,000 |
கொச்சி | Rs 5,000 | Rs 18,000 |
மும்பை | Rs 8,000 | Rs 22,000 |
NCR (டில்லி) | Rs 8,000 | Rs 22,000 |
பூனா | Rs 6,000 | Rs 18,000 |
விசாகப்பட்டினம் | Rs 5,000 | Rs 17,000 |
கொல்கத்தா | Rs 7,000 | Rs 20,000 |
விஜயவாடா | Rs 5,000 | Rs 15,000 |
வடுக்களை நீக்கும் லேசர் சிகிச்சைக்கான கட்டணம் ஏன் வேறுபடுகிறது?
இந்தியாவைப் பொருத்தமட்டில் லேசர் மூலம் வடுக்களை நீக்குவதற்கான கட்டணம், கீழ்க்கண்ட காரணங்களால் வேறுபடுகிறது –
- வடுக்களின் அளவு – வடுக்களின் அளவு, எந்த விதமாக இந்த சிகிச்சையை வழங்கலாம் என்பதை நிர்ணயிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதேபோல எத்தனை முறை செய்ய வேண்டும் என்பதும் வடுக்களின் அளவைப் பொருத்தே நிச்சயிக்கப்படும். இவற்றால் கட்டணங்கள் மாறுபடலாம்.
- வடுக்களின் ஆழம் – சில வடுக்கள் சருமத்தின் ஆழம் வரை செல்லக்கூடியவை. அவற்றுக்கு அதிக அமர்வுகள் (Sessions) தேவைப்படலாம். அதனால் கட்டணம் அதிகரிக்கலாம்.
- வடுக்களின் வகை – சில வகையான வடுக்களை நீக்க, ஓரிரண்டு சிகிச்சை முறைகளை இணைத்துச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். அப்போது கட்டணம் அதிகரிக்கலாம்.
- அனுபவம் பெற்ற மருத்துவர் – நல்ல பயிற்சியும் அனுபவமும் மிக்க மருத்துவர்கள் அதிநவீன கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும்போது அதற்கேற்ப கட்டணங்கள் மாறுபடலாம்.
- கிளினிக் அமைந்துள்ள இடம் – பெரிய நகரங்களில் மதிப்புமிக்க மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கிளினிக்குகள், இத்தகைய அழகியல் சிகிச்சைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கலாம்.
வடுக்களை நீக்கும் பிற சிகிச்சைகளும், கட்டணங்களும்
வடுக்களை நீக்க தோல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வேறு சில சிகிச்சைகளும் அதற்கான காரணங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
- இரசாயன ‘பீல்கள்’ – செடிகளில் இருந்து எடுக்கப்பட்ட சில சாறுகளைப் பயன்படுத்தி சருமத்தின் மேல் பகுதியை சுரண்டுவது போல சிகிச்சையை சில தோல் மருத்துவர்கள் அளிக்கின்றனர். அப்போது அங்குள்ள இறந்துபோன செல்கள் நீக்கப்படுகின்றன. அப்போது கருந்திட்டுக்களால் ஏற்பட்ட வடுக்கள் பெருமளவு நீங்குகின்றன. இதற்கான கட்டணம் ஒரு முறை செய்வதற்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை ஆகலாம்.
- மைக்ரோ-நீடிலிங் ரேடியோஃப்ரீக்வென்ஸி (MNRF) முறை – ரேடியோ ஃப்ரீக்வென்ஸி அதிர்வலைகள் மூலம் சருமத்தின் மேல் பகுதியில் வெப்ப நிலைக்கேற்ப சிறு சிறு மண்டலங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அப்போது உண்டாகும் வெப்பம் கொலாஜன் சுரக்க வழி செய்கிறது. எனவே வடுக்கள் மறைந்து சருமம் சீராகிறது. இந்த சிகிச்சைக்கு சராசரியாக ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை (ஒரு முறைக்கு) செலவாகலாம்.
- மைக்ரோடெர்மாபரேஷன் – இந்த முறையில் மிக நுண்ணிய முறையில் மெதுவாக சுரண்டுவது மூலம் சருமத்தின் மேல் பகுதியில் உள்ள இறந்துபோன செல்கள் நீக்கப்படுகின்றன. அப்போது உள்ளிருந்து, பாதிக்கப்படாத, இறுகின சருமம் வெளிப்படுகிறது. இந்த சிகிச்சையை வடுக்களை நீக்கப் பயன்படுத்தினால் ஒருமுறை செய்ய ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை ஆகலாம்.
- டெர்மல் ஃபில்லர்கள் (Dermal Fillers) – ஆழமான வடுக்கள் உள்ள இடத்தில், ஹையாலுரானிக் அமிலம் கொண்ட ஃபில்லர்கள் மூலம் அந்தக் குழிவடைந்த பகுதிகளை மருத்துவர்கள் நிரப்புவார்கள். இது ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை அந்த இடத்தை நிரப்பியிருக்கும். நாளாக ஆக உடலில் சுரக்கும் நிண நீர்கள் (enzymes) இந்த அமிலத்தை உறிஞ்சி ஜீரணித்துவிடும். எனவே இந்த முறையில் நீண்டகால தீர்வு கிடைக்காது. இந்த முறை சிகிச்சைக்கான கட்டணம் ஒருமுறைக்கு ரூ.20,000 முதல் ரூ.1,00,000 வரை ஆகலாம் (பிராண்ட்டைப் பொருத்தது).
- தோல் ஒட்டுப்போடுதல் (கிராஃப்டிங்) – இது சற்று சிக்கலான அறுவை சிகிச்சை முறை என்றே கூறலாம். உடலின் வேறு ஒரு இடத்திலிருந்து (தொடைப்பகுதி போன்ற அதிக கொழுப்பு சத்துள்ள) சருமத்தை எடுத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துப் பொருத்துவார்கள். பொதுவாக இந்த முறையை தீப்புண்களால் ஏற்படும் வடுக்களை நீக்குவதற்காகப் பெரிதும் பயன்படுத்துவார்கள். இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால். அதிக கட்டணம் ஆகலாம், பலன்கள் கிடைக்க பல நாட்கள் ஆகலாம். இந்த ஸ்கின் கிராஃப்டிங் சிகிச்சைக்கான கட்டணம் ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை ஆகலாம்.
- நீக்குதல் – இந்த சிகிச்சை முறையில் வடுவைச் சுற்றியுள்ள, பாதிக்கப்பட்ட திசு மிகக் கவனமாக வெட்டி எடுக்கப்படுகிறது. பிறகு அந்த இடத்தில் பல அடுக்குகளில் தையல்கள் போடப்பட்டு சருமம் சீராக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை (ஒருமுறைக்கு) ஆகலாம்.
- பாதிக்கப்பட்ட இடத்தில் தடவக்கூடிய மருந்துகள் – சிலிக்கானுடன் கூடிய வடு நீக்கக்கூடிய கிரீம்கள் பல மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. லேசர் சிகிச்சை போன்றவற்றோடு ஒப்பிடும்போது இந்த கிரீம்கள் மிகக் குறைந்த பலனையே தரக்கூடும். ஏனென்றால் இவற்றால் மிக ஆழமாக ஊடுருவிச் செல்ல முடியாது. இந்த கிரீம்கள் ரூ.900 முதல் ரூ.7,000 வரை கிடைக்கின்றன. பிராண்ட் மற்றும் உட்பொருட்கள் அடிப்படையில் கட்டணம் மாறுகிறது.
உங்களது வடு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை நன்கு பரிசோதித்து அதன் தீவிரத்தை உணர்ந்து அதற்கேற்ப சரியான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார். லேசர் சிகிச்சை மிகவும் துல்லியமாக மிகச் சிறந்த முறையில் செயல்படுவதால் அது மற்றவற்றை விட மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. சிறந்த பலன்களைப் பெற, உங்கள் மருத்துவர் அதை MNRF அல்லது கெமிக்கல் பீல் போன்றவற்றுடன் இணைத்தும் பரிந்துரைக்கலாம்.
வடுக்களை நீக்க லேசர் சிகிச்சை – பிற சிகிச்சைகள் ஒரு ஒப்பீடு
லேசர் சிகிச்சை மிகவும் துல்லியமாக மிகச் சிறந்த முறையில் செயல்படுவதால் அது மற்றவற்றை விட மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. சிறந்த பலன்களைப் பெற, உங்கள் மருத்துவர் அதை MNRF அல்லது கெமிக்கல் பீல் போன்றவற்றுடன் இணைத்தும் பரிந்துரைக்கலாம்.
லேசர் முறையில் வடுக்களை நீக்கும் போது கிடைக்கும் சில சிறப்புப் பலன்கள்:
- விரைவான செயல்முறை – பொதுவாக வடுக்களை நீக்க லேசர் சிகிச்சை செய்ய 2 மணி நேரம் ஆகலாம். உங்களைத் தயார் செய்து மரத்துப்போக கிரீம் தடவும் நேரம் முதல் கணக்கெடுத்தாலும் 2 மணி நேரமே ஆகும்.
- பலன்களுக்காக வெகு நாட்கள் காத்திருக்க தேவையில்லை – சில சமயங்களில் பலன் தெரிய சில காலம் காத்திருக்கலாம். நன்கு பராமரித்து வந்தால் விரைவில் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்.
- மிகச் சிறந்த பலன்கள் – 6-8 அமர்வுகளுக்குப் பிறகு பலன்கள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் வடுக்கள் மறையத் தொடங்குவது நன்கு தெரியும். ஆனாலும் உங்கள் வடுக்களின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொருத்து மருத்துவர் எத்தனை முறை செய்யவேண்டும் என்று முடிவெடுப்பார்.
- அறுவை சிகிச்சை தேவையில்லை – இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. இரத்தப்போக்கு அல்லது காயங்கள் இருக்காது.
- பக்க விளைவுகள் இல்லை – USFDAவின் ஒப்புதல் பெற்ற அதிநவீன லேசர் சிகிச்சை. மிகவும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எவ்விதமான தொற்றும் எரிச்சலும் ஏற்படாது.
- வசதியானது – மற்ற எல்லா முறைகளை விட வடுக்களை நீக்க லேசர் சிகிச்சை முறையே மிகவும் வசதியானது.
- துல்லியமானது – மிகவும் அனுபவம் வாய்ந்த தோல் மருத்துவர்கள் உங்கள் வடுக்களை நன்கு பரிசீலித்து அதற்கேற்ப லேசர் சிகிச்சையின் காரணிகளை துல்லியமாகக் கணக்கிட்டு செலுத்துவார்கள். அதனால் அருகில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படாது.
- பன்முகத்தன்மை கொண்டது – இது பொதுவாக இந்தியர்களின் அனைத்து விதமான சரும வகைகளுக்கும் பொருந்தக்கூடியது.
இப்போது லேசர் சிகிச்சை பற்றி, அது செய்யப்படும் விதம், பலன்கள், அதற்கு ஆகும் செலவு போன்ற அனைத்தையும் நீங்கள் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். மேம்பட்ட முறையில் வடுக்களை முற்றிலும் நீக்கி அழகியல் சார்ந்த சிகிச்சைகள் பெற விரும்பினால், இன்றே ஒலைவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
வடுக்கள் நீக்குவது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- எல்லாவிதமான வடுக்களையும் நீக்க முடியுமா?
ஆம். லேசர் ரீசர்ஃபேசிங் சிகிச்சை முறை மூலம் அனைத்து வித வடுக்களும் சிகிச்சை அளிக்க முடியும். இருந்தாலும் எந்த சிகிச்சையை அளிப்பது என்பதையும். அதைப் பற்றிய கணிப்பையும் வடுக்களின் தீவிரத்தைப் பொருத்து மருத்துவரே முடிவு செய்வார். - மேம்பட்ட சிகிச்சைகள் மூலம் வடுக்களை முற்றிலும் நீக்க முடியுமா?
லேசர் முறை மூலம் வடுக்களை அழிக்கவும் மங்கச் செய்யவும் முடியும்; அல்லது கண்ணுக்கு தெரியாத அளவு செய்யமுடியும். வடுக்கள் லேசானவை அல்லது மிதமானவையாக இருந்தால் இவற்றைச் செய்ய முடியும். லேசர் ரீசர்ஃபேசிங் சிகிச்சை வடுக்களை மறையச் செய்யாது ஆனால் வெளியே தெரியாத அளவு மங்கச் செய்யும். - இச் சிகிச்சை யாருக்குப் பொருத்தமானது?
18 வயதுக்கு மேற்பட்டவர்கள், நிறைய பருக்கள் வருபவர்களாக இருந்தால் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் இது கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் பொருந்தாது. - எப்படிப்பட்ட பலன்களை எதிர்பார்க்கலாம்?
லேசர், MNRF மற்றும் இரசாயன பீல் போன்ற அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகள், வடுக்களை மிகப் பெரிய அளவில் மங்கச் செய்துவிடும். ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். - இந்த சிகிச்சைக்கு மொத்தம் எவ்வளவு காலம் ஆகும்?
இது வடுக்களின் தீவிரம், அவற்றின் அளவு, தேர்ந்தெடுக்கப்படும் சிகிச்சை இவற்றின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் மாறுபடும். பொதுவாக 6-8 முறை செய்யலாம். ஒரு முறைக்கும் அடுத்த முறைக்கும் ஏறக்குறைய 1 மாத இடைவெளி இருக்கும். - ஒருவருக்கு எத்தனை அமர்வுகள் தேவைப்படும்?
பொதுவாக மருத்துவர்கள் 6-8 அமர்வுகளை பரிந்துரைப்பார்கள். - வடுக்களை நீக்கும் சிகிச்சைகளில் உள்ள ஆபத்துகள் / பிரச்சினைகள் எவை?
இவை பொதுவாக பாதுகாப்பானவை. நல்ல பலன்களைத் தருபவை. மிகக் குறைந்த பக்கவிளைவுகள் இருக்கலாம். ஆனாலும் எவ்வித ஆபத்தும் இன்றி பாதுகாப்பான சிகிச்சை பெற அனுபவமிக்க தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். - வடு நீக்கும் சிகிச்சைக்குப் பிறகும், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் உண்டா?
பெரும்பாலான வடு நீக்கும் சிகிச்சைகளுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை – நல்ல பலன்களும் உடனடியாகவே கிடைக்கும். ஆயினும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அந்த மருத்துவர் சொல்வதற்கேற்ப சிகிச்சைக்குப் பிறகும் மருத்துவரை பார்க்க தேவை இருக்கலாம். - வடு நீக்கிய பிறகு, பழையபடி வேலைகளைச் செய்ய எத்தனை நாள் ஆகலாம்?
அறுவை சிகிச்சை ஏதும் இல்லையென்றால் காத்திருக்கவே தேவையில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் சில நாட்கள் மருத்துவமனையில் சில/பல நாட்கள் தங்க நேரிடலாம். - சிகிச்சைக்குப் பிறகு வடு எப்படித் தெரியும்?
2வது அல்லது 3வது அமர்வுக்குப் பிறகு உங்கள் வடுக்கள் மங்க/மறையத் தொடங்கி சருமமும் மேம்படும். - வடுக்களை நீக்க பிளாஸ்டிக் சர்ஜரி மட்டும்தான் வழியா?
இல்லை – அறுவை சிகிச்சை இல்லாத பல முறைகள் இருக்கின்றன. ஃப்ராக்ஸல் ரீசர்ஃபேசிங், MNRF, JCA கிராஸ் பீல் போன்ற சிகிச்சைகள் மூலம் வடுக்களை நீக்கி நல்ல பலன்களைப் பெறலாம்.