UPTO 30% Off on All Services

இந்த ஐஸ் பிக் வடுக்களுக்கு 8 விதமான மிகச் சிறந்த சிகிச்சைகள் உள்ளன

UPTO 30% Off on All Services

    Speak To Our Expert

    Please enter your contact information.

    பருக்களால் ஏற்படும் வடுக்களிலேயே மிகக் கடுமையானவை தீவிரமானவை இவைதான்; ஏனெனில் அவை சருமத்திற்கு கீழே மிக ஆழமாகச் செல்லுகின்றன. அவைகளின் வடிவம், ஊடுருவிச் செல்லும் ஆழம் ஆகியவற்றுக்கு கடுமையான சிகிச்சைகள் தேவைபட்டாலும், மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் தற்போது உள்ளன. எனவே இந்த வடுக்களை குணப்படுத்தி நீக்க முடியும். இந்த மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் மூலம் வடுக்கள் தெரியாத வண்ணம் செய்து, உங்கள் சருமத்திற்கே ஒரு புதுப் பொலிவைத் தர முடியும்.

    இந்த ஐஸ் பிக் வடுக்கள் ஏன் உருவாகின்றன?

    நமது சருமத்தில் தோன்றும் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளி போன்றவற்றை கவனிக்காமல் விட்டு விடுவதால்தான் பெரும்பாலும் இந்த ஐஸ் பிக் வடுக்கள் தோன்றுகின்றன. உங்களுக்கு மிக அதிகமாக பருக்கள் வந்து கொண்டிருந்தால், வடுக்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இந்த வடுக்கள் மிகவும் குறுகியவையாகவும் மிக ஆழமாகவும் (2 மிமீ வரை) இருக்கும். இவற்றின் விளிம்புப் பகுதிகள் ஐஸ் கட்டிகள் போல மிகவும் கூர்மையாக இருப்பதால் தான் இவை ஐஸ் பிக் வடுக்கள் என்று கூறுகிறோம். இவை பெரும்பாலும் கரும்புள்ளிகள் போன்ற பிளாக் ஹெட்ஸ்க்குப் பிறகு வருகின்றன. நமது சருமத்தில் அப்போது கொலாஜன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஐஸ் பிக் வடுக்கள் நமது முகம், மூக்கு, நெற்றி மற்றும் கன்னத்தின் மேல் பகுதி போன்ற இடங்களில், பருக்கள் தோன்றிய பிறகு தோன்றும். அவ்வாறு தோன்றும்போது நாட்களைக் கடத்தாமல் வெகுவிரைவில் தோல் மருத்துவரை சந்தித்து உங்கள் சருமத்திற்கேற்ற சிகிச்சை முறைகளைத் தெரிந்துகொள்வது நல்லது.

    ஐஸ் பிக் வடுக்களுக்கு மிகவும் சிறந்த சிகிச்சைகள் எவை?

    இந்த வடுக்களை நீக்குவது மிகவும் சவாலான காரியம்தான். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சைகளை இணைத்துத்தான் அளிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வடுக்கள் குறையும் / மறையும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற சரியான சிகிச்சையை உங்கள் தோல் மருத்துவரால் சரியாகக் கணிக்க முடியும். அப்போதுதான் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். கீழ்க்கண்ட மிகச் சிறந்த சிகிச்சைகளை தற்போது செய்ய முடியும்:

    • ஐஸ் பிக் வடுக்களுக்கு லேசர் சிகிச்சை – இத்தகைய வடுக்களுக்கு லேசர் ஸ்கின் ரீசர்ஃபேஸிங் என்பது மிகச் சிறந்த சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் அந்த வடுக்கள் வெளியே தெரிவது வெகுவாகக் குறைக்கப்படும். இந்த சிகிச்சை அளிக்கும்போது தோல் மருத்துவர் அதிக அதிர்வலைகளுடன் கூடிய லேசர் கதிர்களைச் செலுத்தி, வேறு சிகிச்சைகளையும் இணைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள, வடுக்கள் உள்ள பகுதியில் உள்ள திசுக்களைக் குறிவைப்பார். அந்த இடத்தில் ஆழமாக இவற்றைச் செலுத்தும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். தோல் மருத்துவர்கள் இந்த சிகிச்சை வழங்கும் போது 2 விதமான லேசர் கதிர்களைப் பயன்படுத்துவார்கள். Non ablative & Ablative laser என இரு வகையையும் பயன்படுத்துவார். இதில் அப்லேடிவ் லேசர், சருமத்தின் மேல் பகுதியை மட்டும் நீக்குகிறது. நான்-அப்லேடிவ் லேசர் கீழுள்ள சருமத்தின் திசுக்களை சூடாக்குகிறது. (சருமத்திற்கு எந்த பாதிப்பும் இன்றி) அப்போது புது கொலாஜன் சுரக்கிறது. வேறு ஒருவிதமான YAG லேசர் (Pixel, a fractionated erbium YAG laser) மிகுந்த துல்லியத்துடன் செயல்பட்டு பெரிய காயங்கள் எதுவுமின்றி புதிய ஆரோக்கியமான சருமம் உருவாகத் துணை புரிகிறது. புதிய கொலாஜன் உருவாவதால், வடுக்களின் ஆழம் குறைந்து விடுகிறது. உங்களது வடுக்களின் ஆழத்தைப் பொருத்து இவற்றுடன் வேறு சிகிச்சைகளையும் இணைத்து உங்கள் தோல் மருத்துவர் உங்களுக்கு வழங்கலாம்.வடுக்களை நீக்க ஒரு சிகிச்சை வழங்கப்படும்போது, மேலே உள்ள சருமப் பகுதியை நீக்கி, கொலாஜன் சுரக்க வைத்து அதன் மூலம் அங்குள்ள சிறு துளைகளை நிரப்புவதற்கே முயற்சி செய்யப்படுகிறது. இந்த பிக்ஸல் லேசர் ரீசர்ஃபேஸிங் முறையில் சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு நல்ல பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். இதற்கு சில வாரங்கள் ஆகலாம். இந்த வீடியோவைப் பார்த்து மேலும் சில விவரங்களை நன்கு தெரிந்து கொள்ளலாம்.
      ஐஸ் பிக் வடுக்களுக்கு சிகிச்சை அளிப்பதைப் பற்றிய விவரங்களைத் தரும் வீடியோ

      • மைக்ரோநீட்லிங் ரேடியோ ஃபீரீக்வென்ஸி – தோல் மருத்துவர்கள், பருக்களால் ஏற்படும் வடுக்களை சரி செய்வதற்காக இந்த அதிநவீன சிகிச்சை முறையைப் பயன்படுத்துவார்கள். பிற சிகிச்சை முறைகளைப் போலவே இதன் மூலமும் கொலோஜனை சுரக்கச் செய்ய முடியும். இந்த சிகிச்சை முறையில் மிக நுண்ணிய ஊசிகள் மிகக் கூரான வடிவத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு, தேவையான ஆழத்திற்கு மட்டும் மிகக் கவனமாக சருமத்திற்குள் செலுத்தப்படுகின்றன. இந்த ஊசிகள் ரேடியோ ஃபீரீக்வென்ஸி அதிர்வுகளின் சக்தியை சரியான ஆழத்தில் கொண்டு சேர்க்கின்றன. அப்போது சுற்றியுள்ள திசுக்களோ, சருமத்தின் மேல் பகுதியோ எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. இவ்வாறு செய்யும்போது கொலோஜெனும் எலாஸ்டினும் மேலும் சுரக்கின்றன. இந்த MNRF சிகிச்சை முறைகள் ஏறக்குறைய 1-3 மாதங்களில் சில முறைகள் அளிக்கப்பட்ட பிறகு நல்ல பலன்களைத் தரும்.
      • ஐஸ் பிக் வடுக்களுக்கான கெமிக்கல் பீல் – இந்த ஐஸ் பிக் வடுக்களை நீக்க TCA கிராஸ் என்ற ஒரு மிகச் சிறந்த முறையும் இருக்கிறது. இந்த முறையில் கொலாஜன் அதிகம் சுரக்க வைக்கப்படுகிறது; அதனால் வடுக்களின் ஆழம் குறைகிறது. சாதாரணமாக ஒரு ஃபேஷியல் செய்துகொள்ளும் நேரத்தில் இதை செய்துவிடலாம்; சிறந்த பலன்களும் கிடைக்கும்.
      • பஞ்ச் எக்ஸிஷன் – இந்த சிகிச்சை முறையும் ஐஸ் பிக் வடுக்களை நீக்குவதற்கான ஒரு முறையாகும். இந்த சிகிச்சையின் போது ஒவ்வொரு வடுவும் உள்ள இடத்தில் மிக மிகச் சிறிய அளவில் கீறப்பட்டு வடுக்கள் நீக்கப்படுகின்றன. பின்பு அந்த இடம் ஸ்டெரி-ஸ்ட்ரிப்புகள் மூலம் (அ) தையல்கள் போடப்படுவதன் மூலம் மூடப்படுகின்றது. இந்த சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவர் அந்த இடத்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் மிகக் கவனமாக மூடிவிடுவார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வடுக்கள் மறைந்து விடும். சில சமயங்களில் மிக மிக லேசான வடு தங்கி விடலாம். ஆனால் அது பழைய வடுவை விட மிக லேசானதாக இருக்கும். மிக அகலமான வடுக்களை நீக்க மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

    • பஞ்ச் கிராப்ஃப்டிங் – ஐஸ் பிக் வடுக்களை நீக்க இத்தகைய பஞ்ச் கிராஃப்டிங் முறையை சிறப்பு தோல் மருத்துவர்களான டெர்மடோசர்ஜன் எனும் வல்லுநர்கள் செய்வார்கள். இந்த முறையில் வடுக்களால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஒரு பஞ்ச் மற்றும் சிறு தோல் பகுதி கொண்டு நிரப்புவார்கள். இதற்கு தேவையான சிறிய தோல் பகுதியை பெரும்பாலும் காதுகளுக்குப் பின்புறமிருந்து எடுத்து அதை வடுவின் மேல் வைத்து பசை போல ஒன்றைப் போட்டு ஒட்டியோ அல்லது தையல்கள் போட்டோ சரி செய்வார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் அந்த இடத்தில் தோல் பகுதி முற்றிலும் ஆறிவிடும்.அதிகம் அசைக்காத இடங்களில் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நெற்றியில் இந்த சிகிச்சை மிகவும் பலன் அளிக்கவும். எந்த இடத்திலிருந்து தோலை எடுக்க வேண்டுமோ, அந்த இடத்தில் உள்ள தோல் பகுதி, பாதிக்கப்பட்ட பகுதியின் தோல் பகுதியின் நிறம், தன்மை ஆகியவற்றை எந்த அளவு ஒத்திருக்கிறதோ அந்த அளவு இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமையும்.
    • மைக்ரோடெர்மாஅபரேஷன் – இதுவும் ஐஸ் பிக் வடுக்களை நீக்க தோல் மருத்துவர் பின்பற்றும் ஒரு சிகிச்சை முறையே ஆகும். மிக மிகச் சிறிய கிரிஸ்டல்கள் அல்லது நல்ல கூர்மையான சிறு கருவியைக் கொண்டு லேசாக பாதிக்கப்பட்ட பகுதியை சுரண்டி, இறந்துபோன செல்களை நீக்குவார்கள் பஞ்ச் எக்ஸிஷன் முறைக்கு பிறகு மிகச் சிறந்த பலன்களைப் பெறுவதற்காக இந்த முறையையும் சிலர் மேற்கொள்வார்கள்.
    • டெர்மாஅபரேஷன் – சிலர் கிரிஸ்டல்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக வயர்கள் நிறைந்த பிரஷ் அல்லது சிறிய உலோகத்தால் ஆன சக்கரம் போன்ற கருவியைப் பயன்படுத்தி தோலின் மேல் பகுதியை சுரண்டுவார்கள். அதுவே டெர்மா ஆபரேஷன் சிகிச்சை முறையாகும். தோல் மருத்துவர் இதை மிக வேகமாக சருமத்தின் மேல் செலுத்தி மேலாக உள்ள பகுதியை மட்டும் நீக்கி விடுவார். அதற்குப் பிறகு அந்த இடத்தில் நல்ல ஆரோக்கியமான சருமம் வளரும். நல்ல பலன்களைப் பெற சில சமயங்களில் இந்த சிகிச்சையை உங்கள் மருத்துவர் மீண்டும் மீண்டும் செய்யும்படி நேரிடும். இந்த சிகிச்சைக்கு பிறகு சிலருக்கு வீக்கம், கருந்திட்டுக்கள் (PIH) மற்றும் வடுக்கள் ஏற்படலாம். இப்போது இதை விடச் சிறந்த, பாதுகாப்பான பல முறைகள் இருப்பதனால், தற்போது தோல் மருத்துவர்கள் இந்த முறையை சிபாரிசு செய்வதில்லை.
    • ஐஸ் பிக் வடுக்களை நீக்க கிரீம்கள் / வீட்டிலேயே செய்யும் கை வைத்தியங்கள் – பெரும்பாலான சமயங்களில் பருக்களை சரியாகக் கையாளாத காரணத்தால்தான் இந்த ஐஸ் பிக் வடுக்கள் தோன்றுகின்றன. கை வைத்தியங்களும் கடைகளில் கிடைக்கும் சாதாரண கிரீம்களும் இந்த வடுக்களுக்குத் தீர்வளிக்க முடியாது. இவைகளால் அந்த அளவு ஆழத்தை அடையவே முடியாது. மருத்துவ அடிப்படையில் தான் சரியான சிகிச்சைகள் அளிக்க முடியும். மீண்டும் வராமல் தடுக்க முடியும்.

    ஐஸ் பிக் வடுக்களுக்கான சிகிச்சைக்கு இந்தியாவில் ஆகக்கூடிய செலவு

    இந்தியாவில் இதற்கான செலவு ஒவ்வொரு முறைக்கும் ரூ.7,000 லிருந்து ரூ.20,000 வரை ஆகலாம். எந்த சிகிச்சைமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறது, எந்த அளவு வடுக்கள் தீவிரமாக உள்ளன, எத்தனை முறை செய்யப்படவேண்டும், மருத்துவரின் அனுபவம், கிளினிக் அமைந்துள்ள இடம், அதன் புகழ் ஆகிய பல விஷயங்களைப் பொருத்து கட்டணம் மாறுபடலாம்.

    மேற்கண்ட கட்டணங்கள் குறிப்பிற்காக மட்டுமே. புகழ்பெற்ற ஒரு கிளினிக்கிற்கு சென்று சரியான கட்டணத்தை அறியவும்.

    ஐஸ் பிக் வடுக்கள் சிகிச்சைக்கு முன் – பின் பலன்கள்

    இந்தப் படங்கள் ஐஸ் பிக் வடுக்களுக்கான சிகிச்சைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்டவை.

    ஐஸ் பிக் வடுக்கள் வராமல் எப்படித் தடுக்கலாம்?

    கீழ்க்கண்ட குறிப்புகள் ஐஸ் பிக் வடுக்கள் வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அவற்றை சரியாகக் கையாளவும், மேலும் அதிக வடுக்கள் ஏற்படாமல் இருக்கவும் மிகவும் உதவியாக இருக்கும் –

    • கரும்புள்ளிகள் தோன்றினால் உடனடியாக தோல் மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சை பெறவும். பெரும்பாலும் அவைதான இந்த வடுக்களை ஏற்படுத்துகின்றன.
    • கட்டாயம் தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும். உங்கள் சருமம் கருமை அடையாமல் தடுக்கவும், மேலும் வடுக்கள் ஏற்படாமல் இருக்கவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
    • எப்போதும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, மாய்ச்சரைசர் பயன்படுத்தவும். உங்கள் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் விரைவில் சரியாக இது உதவும். மேலும் சருமத்தின் தன்மையை மேம்படுத்தி, சிகிச்சைகளை ஏற்றுக்கொண்டு, அதிகப் பலன் பெறுமாறும் செய்யும்.
    • சரியான கிளென்சர்கள் மற்றும் மாய்ச்சரைசர்கள் பயன்படுத்தி தினசரி சருமப் பராமரிப்பை கவனமாக, தவறாமல் செய்யவும். உங்கள் சருமத்திற்கேற்றவைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
    • பருக்களை / வடுக்களைக் கிள்ள வேண்டாம். பாதிப்பு அதிகமாகலாம்.
    • எந்தவிதமான கை வைத்தியம் செய்வதற்கு முன்பு, தோல் மருத்துவரிடம் சென்று உங்களுக்கான சரியான சிகிச்சை முறைகளைக் கேட்டு அறியுங்கள்.

    இந்த ஐஸ் பிக் வடுக்கள் நாளடைவில் மறைவதில்லை. உங்களுக்கு அவை இருந்தால், குறைப்பதற்கு மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படவும்.

    இன்றே ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கிற்கு வரவும். உங்களுக்குப் பொருத்தமான சிகிச்சை பற்றி அறியவும்.

    Was this article helpful?

    About The Author

    Dr.Lakshmi Durga

    Dr. Lakshmi Durga M had completed her MBBS from the prestigious Dr. MGR Medical University in 2005 and DDVL from Manipal Academy Of Higher Education, Manipal, India in 2010. She also a member of Medical Council of India (MCI).