- Home
- ேங்கியுள்ை சருேத்திற்கோன சிகிச்ளசகள்(Dull Skin Treatments)
மங்கிப்போய் ஒளியிழந்த சருமத்திற்கான மிகச் சிறந்த சிகிச்சை
பளபளப்பான சருமத்தைப் பெற உலகத்தரத்தில் ஒரு தீர்வு!
நமது சருமம் ஒளியிழந்து மங்கலாக இருந்தால், பொதுவாக அது நமது சருமத்தில் உள்ள குறைபாடுகள்/பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். இவற்றால் நமது சருமம் ஒளியிழந்து ஒரு மந்தமான தோற்றத்தைப் பெறுகிறது. நமது சருமத்தின் மேல் பகுதியில் உள்ள இறந்த செல்கள் (Dead Cells) நீக்கப்படும் போது, சருமம் புத்தம் புதிதாக, புத்துணர்வுடன் ஒரு அழகிய தோற்றத்தைப் பெறுகிறது. ஆனால் மிக அதிக வெப்பம், முறையற்ற அன்றாட வாழ்க்கைப் பழக்கங்கள், உடலின் ஆரோக்கியம் சார்ந்த சில பிரச்சனைகள் போன்ற பல காரணங்களால் நமது சருமம் அதன் இயற்கையான நிறம், பளபளப்பு, இளமைத் தோற்றம் போன்றவற்றை சிறிது சிறிதாக இழக்கிறது. இவ்வாறு சருமம் தனது பொலிவை, பளபளப்பை இழக்கும் போது சருமம் களையிழந்து, மந்தமான தோற்றத்தைப் பெறுகிறது. ஆனால் ஒலிவாவில் இவ்வாறு ஒளியிழந்த சருமத்தை சீர் செய்து, மீண்டும் பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கான மிகச் சிறந்த (ஸ்பெஷலைஸ்ட்) தனிப்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
டல் ஸ்கின் (ஒளியிழந்த சருமம்) என்றால் என்ன?
நமது சருமத்தின் பளபளப்பும், ஒளிரும் தன்மையும் பாதிக்கப்படும் போது ஏற்படும் மாற்றங்களைப் பொதுவாக டல் ஸ்கின் (ஒளியிழந்த சருமம்) என்று குறிப்பிடுகிறோம். நமது சருமத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன
- சருமத்தின் சீரற்ற தன்மை
- சரியாக பராமரிக்கப்படாததால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
- முகத்தில் கோடுகள் / சுருக்கங்கள் தோன்றுதல்
- முகத்தில் உள்ள சிறு சிறு துவாரங்கள் அடைபட்டிருத்தல்
- கரும் புள்ளிகள் தோன்றுதல்
- அடர் நிறத் திட்டுக்கள் தோன்றுதல்
உங்கள் சருமம் ஏன் ஒளியிழந்து சோர்வாகத் துடிப்பின்றிக் காணப்படுகிறது?
பொதுவாக வயதாக வயதாக நமது சருமம் ஒளியிழக்கத் தொடங்கும். ஆனால் இளமையிலேயே அவ்வாறு சருமம் ஒளியிழந்து காணப்பட்டால் அதற்குப் பலப்பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் சருமம் போதுமான அளவு ஈரப்பதம் அற்று இருக்கலாம். ஆரோக்கியத் தரும் சரியான உணவு எடுத்துக் கொள்ளாமை, மிகுந்த மன அழுத்தம், ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள், நீங்கள் பயன்படுத்தும் சில அழகு சாதனங்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூரிய ஒளி தொடர்ந்து சருமத்தில் படுதல், சரியான தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் சருமம் ஒளியிழந்து காணப்படலாம். எனவே தொடர்ந்து கவனம் செலுத்தி நமது சருமத்தைப் பராமரிப்பது அவசியம் நன்கு தேய்த்தல், சுத்தம் செய்தல், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் அளித்தல், சருமத்தின் தன்மையை சீராக்குதல் (toning) போன்ற அனைத்திற்கும் சரியான கவனம் அளிக்க வேண்டும். மேலும் நமது சருமம் ஒளியிழக்கத் தொடங்கும் போது, ஆரம்பக் கட்டத்திலேயே அதைக் கவனிப்பது அவசியம். அதற்கான அறிகுறிகளை கவனித்து அப்போதே சிகிச்சை அளிக்கத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யாது போனால் அதன் பாதிப்பு நமது சருமத்தில் நீண்ட நாட்கள் இருக்கலாம்.
உங்கள் முகம் களையிழந்து ஒளியிழந்து காணப்படுகிறதா?
எப்போதுமே உங்கள் சருமத்தின் மினுமினுப்பும் பளபளப்பும் உங்கள் தோற்றத்தை மிகவும் மேம்படுத்திக் காட்டக் கூடியவை. உங்களுடைய வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், சருமப் பாதுகாப்பிற்கான தினசரி நடவடிக்கைகள், உங்கள் உணவு, நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றையே உங்கள் சருமம் பிரதிபலிக்கும் என்று கூறலாம். இவற்றுக்கு நீங்கள் அதிக கவனமும் முக்கியத்துவமும் கொடுத்தால் அதற்கேற்ப உங்கள் சருமம் கூடுதல் பொலிவையும் இளமையான தோற்றத்தையும் பெறும். நமது உடலில் ஏற்படும் உடலியல் சார்ந்த மாற்றங்களின் காரணமாக இயற்கையாகவே தொடர்ந்து நமது சருமம் இறந்த செல்களை நீக்கி, தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். இதன் விளைவாக நமது சருமம் ஆரோக்கியமான, பொலிவான தோற்றத்தைப் பெறும். ஆனால் மேற்கூறியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும்போது முகம் களையிழக்க ஆரம்பிக்கும். அப்போது உங்கள் தோற்றம் உங்களுக்கு திருப்தி அளிக்காமல் இருக்கும். தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தும். இத்தகைய நிலை ஆண் பெண் இருவருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம். இவ்வாறு முகம் களையிழந்து போவதற்கு உடலுக்குள்ளிருந்தும் வெளியேயிருந்தும் பல காரணங்கள் இருக்கலாம். சில காரணங்கள் அவற்றுள் உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கலாம். இவ்வாறு சருமம் களையிழந்து ஒளியிழக்கும்போது நம்முடைய நெற்றி, கழுத்து, கன்னங்கள், கண்கள், உதடுகள், காதுகள், தலைமுடி தொடங்கும் இடம் போன்ற இடங்களில் மிகவும் வெளிப்படையாக தெரியும். அவ்வாறு நேரும்போது மிகச் சிறந்த வல்லுநர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், நமது சருமத்தின் இயற்கையான பிரகாசத்தையும் மினுமினுப்பையும் மாற்றும் இந்த அறிகுறிகளைச் சரிசெய்வது மிகவும் கடினமான செயலாகும்.
நமது சருமத்தின் நிறம் மங்கும் போது பொதுவாக ஏற்படும் அறிகுறிகள்
பொதுவாக நமது சருமம் மங்கும்போது, பார்த்தவுடனேயே அது தெரிந்துவிடும். பெரிய பரிசோதனைகள் தேவையிருக்காது. ஆனால் சருமத்திற்குக் கீழே ஆழமாக உள்ள இறந்த செல்களும் அடைபட்டுள்ள துவாரங்களும் முதலில் வெளியே தெரியாது. எனவே மிகக் கவனமாக சருமம் ஒளியிழந்து மங்கத் தொடங்கும்போது ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சைகளை வழங்கவும். சிகிச்சைகளை சரியான நேரத்தில் வழங்குவதும் மிக அவசியம். கீழ்க்கண்ட அறிகுறிகளைக் கவனமாகக் கண்டறியவும் –
- சருமத்தின் சீரற்ற தன்மை
- சருமம், இயற்கையான பளபளப்பை இழந்து இருத்தல்
- சருமம் உயிர்ப்பின்றி இருத்தல்
- அடர் நிறத் திட்டுக்கள், சருமம் கருமை அடைதல்
- சீக்கிரமாகவே வயதான தோற்றம் ஏற்படும் விதமாக முகத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றுதல். வயதாவதற்கு அறிகுறியான புள்ளிகள் தோன்றுதல்
ஒளியிழந்த மங்கியுள்ள சருமத்திற்கான சிகிச்சைகள் - பளபளக்கும் சருமத்தைப் பெறுவது எப்படி?
மங்கிப்போய் ஒளியிழந்துள்ள சருமத்தைச் சரிசெய்ய ஒலிவா ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கில் மிகச் சிறந்த, பிரபலமான, மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அழகியலையும் மருத்துவத்தையும் இணைத்து இங்கு வழங்கப்படும் முழுமையான சிகிச்சைகள் மூலம் சருமம் இழந்த பொலிவையும், பளபளப்பையும் மீண்டும் பெறுகிறது. எமது தோல் மருத்துவ நிபுணர்கள் வழங்கும் இரசாயன பீல் சிகிச்சைகள், லேசர் டோனிங் சிகிச்சைகள் போன்றவை இவற்றில் அடங்கும்.
ஒலிவாவில் உங்கள் பயணம் - ஆலோசனை பெறுவது முதல் சிகிச்சை பெறுவது வரை
ஸ்டெப் 1: அபாயிண்ட்மென்ட் பெறுதல் – உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒலிவாவில் உள்ள தோல் மருத்துவர் ஒருவரிடம் முன்பதிவு செய்து அபாயிண்ட்மென்ட் பெறவேண்டும். இந்தப் பக்கத்தில் மேற்புறத்தில் வலது பக்கத்தில் உள்ள Call button ஐ அழுத்தவும். அல்லது Appointment படிவத்தைப் பூர்த்தி செய்யவும் அல்லது உங்களுக்கு வசதியான நேரத்தில் “CALL BACK” செய்யுமாறு பதிவுசெய்யவும். எங்கள் குழுவினர் உங்களுக்கு வசதியான நேரத்தில் மருத்துவரை சந்திக்க உதவி செய்வார்கள்.
ஸ்டெப் 2: கிளினிக்கிற்கு செல்லுதல் – எமது தோல் மருத்துவ நிபுணர்களுடன் முதன்முறை ஆலோசனை பெறுதல் – பிறகு உலகத்தரம் வாய்ந்த ஒலிவாவின் கிளினிக்குகள் ஒன்றிற்கு நேரில் வரவேண்டும். அப்போது ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு எமது குழுவினர் உதவுவார்கள். அதில் உங்களைப் பற்றிய விவரங்களையும் உங்கள் மருத்துவப் பின்னணி பற்றிய விவரங்களையும் தரவேண்டும். பிறகு எங்களது தோல் மருத்துவ நிபுணர் ஒருவரை சந்திக்க வேண்டும். ஏறக்குறைய 30-45 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடிக்கலாம். அப்போது உங்கள் உடல் நலம் பற்றிய அனைத்து விவரங்களும், மருத்துவ பின்னணியைப் பற்றிய விவரங்களும் விரிவாக ஆராயப்படும். பிறகு டெர்மாஸ்கேன் பயன்படுத்தி அவர் உங்களது சருமத்தை நன்கு ஆராய்வார். அதன் அடிப்படையில் பிரச்சனையின் காரணம் மிகத் துல்லியமாகக் கண்டறியப்பட்டு சருமத்தின் பிற பிரச்சனைகளும் ஆராயப்படும்.
ஸ்டெப் 3: சரியான, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்தல் – பிறகு மருத்துவர் உங்கள் சருமப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணத்தை சரியாக குணப்படுத்தக்கூடிய ஒரு தனிப்பட்ட சிகிச்சை திட்டத்தை தயாரிப்பார். அழகியல் சார்ந்த சிகிச்சைகளும் இணைத்து வழங்கப்படுவதால், மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன. ஒளியிழந்த சருமத்தை மாற்றுவது என்பது ஒரே நாளில் இயலாத காரியம். எனவே நன்கு ஆலோசித்து தேவைப்படும் காலம் சரியாகக் கணக்கிடப்பட்டு சிகிச்சைத் திட்டம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் செய்யப்படுகிறது.
ஸ்டெப் 4: செயல்முறை/சிகிச்சை குறித்த சில அறிவுரைகள் – ஒலிவாவில் உள்ள தோல் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை முறை, மருந்துகள், மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள், போன்ற பல விவரங்களை (உங்கள் சருமத்தை ஆராய்ந்த பிறகு) வழங்குவார்கள். இந்த சிகிச்சை முறை, எத்தனை முறை வர வேண்டும், அதற்கான கட்டணம், அதற்குரிய மருந்துகள் போன்ற பல விஷயங்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்படும். இவை வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப திட்டமிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறை மிகச் சிறந்த பலன்களைத் தர எவ்விதம் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதும் விரிவாகத் திட்டமிடப்படும்.
ஸ்டெப் 5: கிளினிக்கில் சிகிச்சை அளித்தல் – அமர்வுகள்
- இந்த சிகிச்சையைத் தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே சருமத்தை Priming செய்வது தொடங்கிவிடும்.
- உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் நாளன்று, முதலில் சருமத்திலிருந்து தூசி, அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை முழுவதும் நீக்கப்படும்.
- பிறகு ஒலிவாவின் தோல் மருத்துவ நிபுணர்கள் செயல்முறையைத் தொடங்குவார்கள்
- செயல்முறைக்குப் பிறகு (இரசாயன பீல் அல்லது லேசர் டோனிங்) சருமத்திற்கு இதமான லோஷன்கள் சருமத்தில் தடவப்படும்.
ஸ்டெப் 6: செயல்முறை / சிகிச்சைக்குப் பிறகு ஆலோசனைகள்
- சிகிச்சைக்குப் பிறகு முதல் 12 மணி நேரத்திற்கு கிளென்ஸரைத் தவிர்க்கவும்
- உங்கள் முகத்தை நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்
- சருமத்தில் ஏதேனும் கூச்ச உணர்வு அதிகமானால் குளிர் ஒத்தடம் கொடுக்கவும் (Cold Compress)
- ஒரு நாளைக்கு 3-4 முறை மாய்ச்சரைஸ் செய்து கொள்ளவும்
- 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை போதுமான அளவு சரியான SPF உள்ள சன்ஸ்கிரீன் லோஷன் தடவவும்
- சிகிச்சைக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குப் பிறகுதான் மேக்அப் பயன்படுத்த வேண்டும்
- சிகிச்சைக்குப் பிறகு 24 மணி நேரம் வரை உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும்
- நீராவிக் குளியல், சானா (Sauna) மற்றும் நீச்சல் போன்றவற்றை சிகிச்சைக்குப் பிறகு 3 நாட்களுக்காவது தவிர்க்கவும்
- ஆண்கள் சிகிச்சைக்குப் பிறகு 12 மணி நேரத்திற்குப் பிறகே ஆஃப்டர் ஷேவ் லோஷன் பயன்படுத்தலாம்
- சிகிச்சைக்குப் பிறகு 1 வாரத்திற்கு பார்லர்களில் சேவைகள்/சிகிச்சைகளைப் பெற வேண்டாம்
- உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி அடுத்த முறை எப்போது வரவேண்டும் என்பது குறித்து திட்டமிடுங்கள்
எப்படித் தொடங்க வேண்டும்?
1800-103-3893 எண்ணை அழைத்து அபாயிண்ட்மெண்ட் பெறலாம். உங்களுக்கு உதவுவதில் எமது குழுவினர் ஆர்வமாக இருப்பார்கள்!
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 6,00,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy
ரேடியன்ஸ் பீல் சிகிச்சைக்கு ஒரு அமர்வுக்கு ரூ.2,000லிருந்து தொடங்கும். லேசர் டோனிங் சிகிச்சைக்கு ஒரு முறைக்கு ரூ.7500 முதல் தொடங்குகிறது. ஒருவரது சருமத்தின் வகை, சிகிச்சை வழங்கப்படவேண்டிய பகுதி, எத்தனை அமர்வுகள் வரவேண்டும். சருமம் சார்ந்த பிற பிரச்சனைகள், பொதுவாக அவரது ஆரோக்கியம் போன்றவற்றின் அடிப்படையில் மொத்தக் கட்டணம் ஒருவருக்கொருவர் மாறுபடும்.
2 அமர்வுகளுக்குப் பிறகு பொதுவாக நல்ல பலன் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் விரும்பிய அளவு நல்ல முழுமையான பலன்கள் கிடைக்க மருத்துவர்கள் கூறியபடி அனைத்து அமர்வுகளுக்கும் வந்து, அவர்களது அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும். அப்போது நிச்சயமாக பளபளக்கும் சருமத்தைப் பெற முடியும். பலன்கள் நீடித்திருக்கும்.
அனைத்து அமர்வுகளுக்கும் சரியாக வந்து சிகிச்சை பெற்று, மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றி நடந்தால் நல்ல பலன்கள் நீடித்திருக்கும். ஆனால் இச் சிகிச்சைகள் அப்போதுள்ள சருமத்தின் தன்மை, இயற்கையாக சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள், உயிரியல் சார்ந்த மாற்றங்கள் இவற்றுக்கு உட்பட்டு செயல்படும். சில சமயங்களில் தொடர்ந்து உங்கள் சருமத்தை பளபளப்பாக மாசுமருவின்றி வைத்துக்கொள்ள கூடுதல் சிகிச்சைகள் பெற வேண்டிய அவசியம் இருக்கலாம். பொதுவாக இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு உங்கள் சருமம் புத்துணர்வு பெற்று, இளமையாகவும் மிகுந்த பொலிவோடும் பளபளப்போடும் மாறும்.
பொதுவாக 6-8 முறைகள் வர வேண்டியிருக்கலாம். இதுவும் ஒவ்வொருக்கும் மாறுபடும். உங்கள் சருமத்தின் வகை, சருமத்தின் அப்போதைய நிலை, வயது, பொதுவான ஆரோக்கியம் சிகிச்சை அளிக்க வேண்டிய பகுதி போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மாறுபடும்.
உங்கள் தோல் மருத்துவர் கூறியபடி தவறாமல் சருமப் பராமரிப்பிற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது மிக அவசியம். ஆரோக்கியமான உணவு, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உடற்பயிற்சிகள், கடுமையான இரசாயனப் பொருட்கள் சருமத்தில் படாதவாறு தவிர்த்தல், சூரிய ஒளி, காற்றில் உள்ள மாசு போன்றவற்றையும் அளவுக்கு அதிகமான மேக்அப்பையும் தவிர்த்தல் போன்ற அனைத்து செயல்களும் சருமம் மங்கிப் போகாமல் தடுக்கும்.
ஆம். மருத்துவர் உணவு, வாழ்க்கை முறை மற்றும் சருமப் பராமரிப்பு குறித்து கீழ்க்கண்டவை உட்பட சில அறிவுரைகளை வழங்குவார் –
- குறைந்த கிளைசெமிக் அளவுள்ள உணவு எடுத்துக்கொள்ளுதல்
- ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 30-45 நிமிட உடற்பயிற்சி செய்தல்
- உங்கள் சரும வகைக்கேற்ற கிளென்சர், மாய்ச்சரைசர், சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்
- நிறைய தண்ணீர் குடித்தல்
- மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண ஃப்ரெஷ் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் அதிக ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் சருமத்திற்கு நல்லது.
- புரோட்டின் பவுடர்கள், துரித உணவுகள், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும்.
ஆம். நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனங்கள் உங்கள் சருமத்தின் மீது கட்டாயமாக பாதிப்பை ஏற்படுத்தும். மிகக் கடுமையான இரசாயனப் பொருட்கள் கலந்த மேக் அப் சாதனங்களைப் பயன்படுத்தினால் நாளடைவில் ஒளியிழக்கும்.
ஆம். எங்கள் லேசர் தொழில்நுட்பம் USFDA ஒப்புதல் பெற்றது. பாதுகாப்பானது. இந்தியாவில் உள்ள அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது.
உங்கள் தோல் மருத்துவர், உங்கள் சருமத்திற்கு ஏற்ற கிரீம், மாத்திரைகள் போன்றவற்றை பரிந்துரைப்பார். அவரது ஆலோசனையின்றி வெளியில் கிடைக்கும் பிற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கிறோம். அவை சில சமயம் சருமத்தை வெகுவாகப் பாதிக்கலாம்.